districts

img

கல்விக் கடனுக்கு சிறப்பு முகாம்கள் வங்கியாளர் கூட்டத்தில் அறிவுறுத்தல்

திருப்பூர், செப். 14 - திருப்பூர் மாவட்டத்தில் கல்விக் கடனுக்கு சிறப்பு முகாம் கள் நடத்தி மாணவர்களுக்குக் கடன் வழங்க வேண்டும் என்று  மாதாந்திர வங்கியாளர் கூட்டத்தில் வங்கிகளுக்கு அறிவுறுத் தப்பட்டது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமையில்  செவ்வாயன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக  கூட்டரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சுப்பராயன், கு.சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில், வங்கியாளர் கள் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆண்டு கடன் திட்டம்  இந்த கூட்;டத்தில் 2022-2023 ஆண்டிற்கான கடன் திட்ட  அறிக்கையை மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்  வெளியட்டார்.  2022-23ஆம் ஆண்டிற்கான முன்னுரிமை கடன்களுக்கான மொத்த திட்ட இலக்கு ரூ.21 ஆயிரத்து 630.00 கோடி. இதில் வேளாண்மை துறைக்கு ரூ.8 ஆயிரத்து 206 கோடியும்,  சிறு வணிகத் துறைக்கு ரூ.12 ஆயிரத்து 946 கோடியும்,பிற முன்னுரிமை கடன்களுக்கான வீட்டுக்கடன், மரபுசாரா எரிசக் திக் கடன், கல்வி கடன் மற்றும் இதர கடன்களுக்கு ரூ.478  கோடியும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சென்ற  ஆண்டு கடன் திட்டத்தை விட ரூ.8 ஆயிரத்து 215 கோடி கூடுத லாகும். கல்வி கடன் முகாம் கல்விக் கடனுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி விண்ணப் பங்களை பரிசீலினை செய்து மாணவர்களுக்கு உடனடியாக  கல்வி கடன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இக்கூட்டத் தில் அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் டி. அலெக்சாண்டர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்  ராமலிங்கம், வங்கியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;