நாமக்கல், மார்ச் 22- நாமக்கல் அரசு மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஒப் பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர் கள், காவலர்கள், உதவியாளர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரு கின்றனர். இந்நிலையில் தூய்மை பணி யாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் செவ்வா யன்று காலை மருத்துவமனை கண்காணிப் பாளர் அறை முன்பு தரையில் அமர்ந்து திடீ ரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நிர்வாகத் தால் நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும். பழிவாங்கும் நோக்கில் தூய்மை பணியாளர்களை ஒப்பந்த நிறுவனம் பணி யிடை நீக்கம் செய்துள்ளது. அதை திரும்பப் பெற வேண்டும். மீண்டும் அவர்களுக்கு பணி வழங்க வேண்டும். தூய்மை பணியாளர் களை இதர பணிகளை செய்ய வற்புறுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த நாமக்கல் காவல் ஆய்வாளர் சங்கரபாண்டியன் போராட் டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அதில் உடன்பாடு ஏற்படாத தால் போராட்டம் நீடித்தது. இப்போராட்டத் தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற் பட்டது.