districts

கோவை முக்கிய செய்திகள்

சாலையோர வியாபாரிகள் சாலை மறியல்

நீலகிரி, மார்ச்.1- நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லம்  அருகே சாலையோரத்தில் சுமார் 50 க்கும்  மேற்பட்டோர், பல ஆண்டுகளாக கடைகள்  அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.  இந்நிலையில், சாலையோர வியாபாரிக ளால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத் துக்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த தாக கூறப்படுகிறது. 

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட கடைகளை காவல் துறையினர் உதவியுடன் நகராட்சி ஊழி யர்கள் அகற்றினர். இதனைத் தொடர்ந்து சாலையோர வியாபாரிகள் தங்களது வாழ் வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறிசாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொ டர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட சாலையோர வியாபாரிகளிடம் காவல்துறையினர் பேச் சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, வியா பாரிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்ப குதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கோவை, மார்ச்.1- கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட  சார் ஆட்சியர் அ.கேத்தரின்சரண்யா தலை மையில் நடைபெற்றது. இதில், அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்கங் கள் பங்கேற்றனர். 

இதில், விதொச பொள்ளாச்சி தாலுகா செயலாளர் கே.பட்டீஸ்வரமூர்த்தி அளித்த மனுவில், ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி, மீன்கரை ரோடு - குஞ்சிபாளையம் இணைப்பு  சாலை உள்ளது. இதன் குறுக்கே உள்ள ரயில்வே கேட்டில் ரயில்வே துறை சுவர் எழுப்பி போக்குவரத்தை தடை செய்ய முயற் சிக்கிறது. இதனை தடுக்க வேண்டும். பொள் ளாச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவர் கள், செவிலியர்கள், செவிலிய உதவியா ளர்கள் உள்ளிட்ட காலி பணியிடங்கள் நிரப்ப  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து  மனுவினை அளித்தார். இதேபோன்று பல் வேறு விவசாய அமைப்புகள் மற்றும் விவசா யிகள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.