districts

img

போலீஸ் பாதுகாப்புடன் மாமூல் கேட்கும் இந்துத்துவா நிர்வாகி

கோவை, ஏப்.25– இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த நபர், காவல்துறை பாதுகாப்புடன் வந்து மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்து வருவ தாக கூறி சாலையோர வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்திற்கு திங்களன்று வந்த  சாலையோர வியாபாரிகள் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது, கோவை நிர்மலா கல்லூரியின் பின்புறம் உள்ள சாலையின் ஓரத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 6 கடைகளை நடத்தி வருகிறோம். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் பெற்று  இளநீர், பப்பாளி, காய்கறி சூப் ஆகிய கடை களை நடத்தி வாழ்க்கையை நகர்த்தி வருகி றோம். அனைவரும் கோவை மாநகராட்சி கொடுத்த அடையாள அட்டையை பெற்றுள் ளோம். பொதுமக்களுக்கோ, போக்குவரத் துக்கோ எவ்வித இடையூறு இல்லாமல் தான் கடைகளை நடத்தி வந்தோம். இந்நிலையில், இந்துஸ்தான் மக்கள் சேவா மையத்தை சேர்ந்த லோட்டஸ் மணி கண்டன் என்பவர் கொடுத்த பொய்யான புகாரின்பேரில், எங்கள் கடைகளை அதி காரிகள் அகற்றி விட்டனர். இந்த லோட்டஸ் மணிகண்டன் என்பவர் இந்துத்துவா அமைப் பின் நிர்வாகியாக இருந்து வந்தார். இவ ருக்கு போலீஸ் பாதுகாப்பு உள்ளது. போலீசாருடன் வரும் மணிகண்டன் ஆயு தபூஜை, விநாயகர் சதுர்த்தி என அவ்வப் போது எங்களிடம் நன்கொடை கேட்பார். நாங்களும் கொடுப்போம்.

ஆனால், இப்போது எனக்கு மாதந்தோறும் ஒரு கடைக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மாமூல் கொடுக்க வேண்டும். ஏனென்றால், “நான் இப்போது இந்துஸ்தான் மக்கள் சேவா கட்சியின் தலைவர்” என்று கூறி போலீஸ் பாதுகாப்போடு வந்து எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கி்றார்.  மேலும், எங்களை பெண்கள் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் வசைபாடி இழிவுபடுத்துகிறார். அவரால் நாங்கள் வியாபாரத்தையும் இழந்து, வாழ்வாதா ரத்தையும் இழந்து், அவமானப்பட்டு நடு ரோட்டில் நிற்கின்றோம். எங்கள் உயி ருக்கோ, உடைமைக்கோ ஏதாவது ஏற் பட்டால் அதற்கு நிறைய அடியாட்களை வைத்திருக்கும் லோட்டஸ் மணிகண்டன் தான் பொறுப்பு. எனவே, மாவட்ட ஆட்சி யர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உண்மை நிலையை ஆராய்ந்து நாங்கள் மீண்டும் கடையை நடத்த அனுமதி அளிக்க வேண்டும். எங்களிடம் லஞ்சம் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்த லோட்டஸ் மணி கண்டனை, பெண்கள் வன்கொடுமை சட் டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என அம் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  முன்னதாக, இந்துத்துவா நிர்வா கியை கைது செய்ய வலியுறுத்தி, பாதிக்கப் பட்ட சாலையோர வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பதாகைகளை  ஏந்தி, முழக்கங்களை எழுப்பியதால் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.