districts

img

சாலை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு, ஏப்.20- தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை  பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோபிசெட்டி பாளையம் கோட்ட பொறியாளர் அலுவல கத்தில் வியாழனன்று காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். நம்பியூர் உட்கோட்டத்தில் பணிபுரியும் சாலை பணியாளர்களுக்கு மாநகர ஈட்டுப்படி யினை விரைந்து வழங்க வேண்டும். மழைக் கோட்டு உள்ளிட்ட பாதுகாப்பு உபகர ணங்கள், தளவாடங்கள் வழங்க வேண்டும். 20 வருட பணி தொடர்ச்சியை நிறைவு செய் தவர்களுக்கு சிறப்பு நிலை ஆணையும், ஊதிய பலன்களும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன், கோட்ட  பொறியாளரின் விதிமீறல் நடவடிக்கையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, கோட்ட தலைவர் என்.முருகவேல் தலைமை ஏற்றார். மாநில  தலைவர் மா.பாலசுப்பிரமணியன் ஆர்ப்பாட் டத்தை துவக்கிவைத்து உரையாற்றினார். கோட்ட செயலாளர் ரா.கருப்புசாமி கோரிக் கைகள் குறித்து உரையாற்றினார். இதில், அரசு ஊழியர் சங்க மாநில துணை பொது  செயலாளர் மு.சீனிவாசன், மாவட்ட செய லாளர் ச.விஜயமனோகரன் மற்றும் சகோதர  சங்க நிர்வாகிகள் வாழ்த்தி உரையாற்றினர். இதில், திரளான நெடுஞ்சாலைத்துறை பணி யாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.