நொய்யல் கரையில் சாலைப் பணி திருப்பூர் மாநகர மேயர் ஆய்வு
திருப்பூர், ஜூலை 4- திருப்பூர் மாநகரத்தின் மையத்தில் பயணிக்கும் நொய் யல் ஆற்றில், சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவிற்கு கரையின் இருபுறமும் (மொத்தம் 26கி.மீ) சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. வியாழனன்று இப்ப ணிகளை மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், ஆணையா ளர் பவன் குமார் கிரியப்பனவர் ஆகியோர் ஆய்வு மேற் கொண்டனர்.
திருப்பூர், ஜூலை 4- திருப்பூர் மாநகரத்தின் மையத்தில் பயணிக்கும் நொய் யல் ஆற்றில், சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவிற்கு கரையின் இருபுறமும் (மொத்தம் 26கி.மீ) சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. வியாழனன்று இப்ப ணிகளை மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், ஆணையா ளர் பவன் குமார் கிரியப்பனவர் ஆகியோர் ஆய்வு மேற் கொண்டனர்.
பாலப்பட்டியில் இன்று மின்தடை
உடுமலை, ஜூலை 4- உடுமலை தாலுகா பாலப்பட்டி துணை மின்நிலையம் மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், 5 ஆம் தேதி வெள்ளியன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்.
உடுமலை காந்தி நகர், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பார்க், ரயில் நிலையம், போலீஸ் குடி யிருப்பு, சந்தை, எஸ்.வி. புரம், பாலப்பம்பட்டி, மைவாடி பிரிவு, கண்ணமநாயக்கனூர், குரல்குட்டை, மடத்தூர், மலை யாண்டிபட்டிணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி மற்றும் பாப்பான்குளம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
பின்னலாடை நிறுவனத்தில் தீ பிடித்து துணிகள் எரிந்து நாசம்
திருப்பூர், ஜூலை 4- திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்த திருநா வுக்கரசு என்பவர் கலைவாணி தியேட்டர் அருகில் பின்ன லாடை நிறுவனம் நடத்தி வருகிறார். இதில், 1000க்கும் மேற் பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வியாழ னன்று காலை பின்னலாடை நிறுவனத்தின் முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த பனியன் துணிகள் மற்றும் அட்டை பெட்டி களில் தீ பிடித்துள்ளது. இதனை கண்ட ஊழியர்கள் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீய ணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதில், பல லட்சம் மதிப்பிலான 3 ஆயிரம் கிலோ பனியன் துணிகள், 100 க்கும்
தற்காலிகமாக ஆசிரியர் நியமனம் ஜூலை 8 க்குள் விண்ணப்பிக்க அவகாசம்
திருப்பூர், ஜூலை 4- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் தற்காலிகமாக ஆசிரியர் நியமனம் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. வரும் ஜூலை 8 ஆம் தேதிக் குள் விண்ணப்பிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல் படும் உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிபணியிடத்தில் தற்காலிகமாக ஆசிரியர் நியமனம் செய்ய ஆணையிடப்பட் டுள்ளது. இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12,000, பட்டதாரி ஆசி ரியருக்கு ரூ.15,000 மாத தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் நியமனம் செய்திட விண்ணப் பங்கள் வரும் ஜூலை 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண் டும். பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் / பதவி உயர்வு மூலம் நிரந்தரப் பணியாளர்கள் நிரப்பிடும் வரை அல்லது இக் கல்வியாண்டில் எது முன்னரோ அது வரையில் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற பணிநாடுநர்களை பள்ளி மேலாண் மைக்குழு மூலம் தெரிவு செய்யப்படும் இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. அரசு ஆதிதிராவிடர் நல உயர்நி லைப்பள்ளி, அம்மாபட்டி பட்டதாரி ஆசிரியர் ஒருவர், அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி, கண்டியன்கோயில் இடைநிலை ஆசிரியர் ஒருவர், அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, குளத்துப்புதூர் இடைநிலை ஆசிரியர் 3 என மொத்தமாக 5 காலி பணியிடங்கள் நியமனம் செய்ய உள்ள னர். விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங் கள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாக உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு டியினர் நல அலுவலர், திருப்பூர் என்ற முகவரிக்கு வரும் ஜூலை 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.
இளைஞர் வெட்டிக் கொலை மேலும் 4 பேர் கைது
திருப்பூர், ஜூலை 4 – திருப்பூரில் சிறுமியுடன் நெருக்கமாக இருந்த புகைப்ப டத்தை எடுத்து, இளைஞர் ஒருவர் பேரம் பேசிய விவகாரத்தில் எட்டு பேர் கும்பல் அவரைக் கொலை செய்தது. காவல் துறை யினர் சிறுமியின் தந்தையை கைது செய்து புதனன்று விசா ரித்ததில், மேலும் 4 பேர் வியாழனன்று கைது செய்யப்பட்டுள் ளனர்.
திருப்பூர் காந்திநகர் அருகே ஏவிபி லே அவுட் பகுதியில் காரில் அழைத்து வரப்பட்ட இளைஞரை எட்டு பேர் கொண்ட கும்பல் காரில் இருந்து இறங்கும்போது சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சடலதைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் கொலை செய்யப்பட் டவர் திண்டுக்கல் மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த அன்பு (எ) புவனேஸ்வரன் (25) என்பது தெரியவந்தது. சுந்தர்ராஜன் என்பவரின் 14 வயது மகளுடன் நெருக்கமாக பழகி அதைப் புகைப்படம் எடுத்ததாகவும், அதைக் காட்டி சிலர் பணம் பறிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திர மடைந்த சுந்தர்ராஜன் எட்டு பேர் கொண்ட கும்பலை வரவ ழைத்து அன்புவை கொலை செய்ததாகத் தெரியவந்தது. இதையடுத்து புதனன்று சுந்தர்ராஜனை கைது செய்த போலீ சார் தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளைத் தேடி வந் தனர். இந்நிலையில் வியாழனன்று புதுக்கோட்டையில் பதுங் கியிருந்த பிரசண்ணா, ஶ்ரீகுமார், தேவகந்தன், ராஜ்குமார் ஆகி யோரை பிடித்து திருப்பூர் அழைத்து வந்து விசாரித்து வருகின் றனர்.