அவிநாசி, டிச.17- பெருமாநல்லூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப் புணர்வு நிகழ்ச்சி நடைபெற் றது. திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் போக்குவ ரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் வியாழ னன்று நடைபெற்றுது. இதில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், செல் போன் பேசிக்கொண்டு வாக னம் ஓட்டுதல் ஆகியவற் றால் ஏற்படும் விபத்து, உயரி ழப்புகள் குறித்தும், தலைக் கவசம், சீட் பெல்ட் உள்ளிட்ட வைகள் அணிந்து வாகனம் ஓட்டுதல் ஆகியவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.