districts

img

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்

நாமக்கல், மே 17- கழிவுநீர் கால்வாயை தூர்வாராத குமாரபாளையம் நகராட்சி நிர்வாகத் தைக் கண்டித்து அப்பகுதி பொதுமக் கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யம் நகராட்சி 33 வார்டுகளை கொண் டுள்ளது. இந்த நகராட்சிக்குட்பட்ட பகுதிகளின் வீடுகளிலிருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்  பிரித்து வாங்குவதற்காக தனியார்  நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படை யில் 100 தூய்மைப் பணியாளர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். மேலும், நகராட்சி நிர்வாகத்தின் மூலம் நிரந்தர தூய்மைப்  பணியாளர்களாக உள்ள 85 தொழிலா ளர்கள், கழிவுநீர் கால்வாயை  தூர்வா ரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நி லையில், 2 ஆவது வார்டுக்குட்பட்ட அய் யம்பாளையம், கிழக்கு காவிரி நகர், சில்வர் டோன் வீதி உள்ளிட்ட பகுதி களில் சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் பிரித்து வைக்கப்பட்ட மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தூய்மைப் பணியாளர் கள் பெற முறையாக வராததால் குப்பை கள் அதிகமாக தேங்கியுள்ளன. மேலும், தற்பொழுது கோடைமழை தொடங்கியுள்ள நிலையில், கழிவுநீர் கால்வாயில் மழைநீர் நிரம்பி, வீடுக ளுக்குள் கழிவுநீர் புகுந்து விடுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவ டிக்கையும் எடுக்காததால், ஆவேசம டைந்த அப்பகுதி பொதுமக்கள் குமார பாளையத்தில் இருந்து எடப்பாடி செல் லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடு பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த நக ராட்சி அதிகாரிகளும், காவல் துறையின ரும் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, உடன டியாக சாக்கடை கால்வாய்களை தூர் வாரவும், குப்பைகளை பெற்றுச் செல்ல வும் நடவடிக்கை எடுப்பதாக உறுதிய ளிக்கப்பட்டது. அதன்பேரில் பொதுமக் கள் மறியலை கைவிட்டு கலைந்து சென் றனர்.

;