அவிநாசி, டிச.2- அனைத்து ஊராட்சிகளிலும் உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்பப்பெற வேண்டும். அவிநாசி அத்திக்கடவுத் திட்டத்தில் விடுபட் டுள்ள குளம், குட்டைகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்ட 24 ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத்து. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்ட 24 ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள்: அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் வட்டார மருத்துவமனைகளில் அனைத்து நோய்களுக்கும் மருத்து வம் பார்க்கும் கூடுதல் சிறப்பு மருத் துவ பணியிடங்கள் மற்றும் செவி லியர் பணியிடங்களை நிரப்ப வேண் டும். விவசாயிகள் மற்றும் குடியி ருப்பு வாசிகள், நிலத்தில் இருந்து அப்புறப்படுத்தும் அறநிலைத் துறை, வக்ஃபு போர்டு நடவடிக்கை களை கைவிட வேண்டும். அமராவதி சர்க்கரை ஆலை புனரமைத்து மீண் டும் இயக்க வேண்டும். கைத்தறி நெச வாளர்களின் வாழ்வாதாரத்தை மேம் படுத்த வேண்டும். நுண்நிதி நிறுவ னங்களின் அத்து மீறிய நடவடிக்கை களை கட்டுப்படுத்த வேண்டும். லட் சக்கணக்கான தொழிலாளர்கள் பணி யாற்றும் திருப்பூரில் அனைத்து வசதி கள் கூடிய இயற்கை மருத்துவம னையை விரைவாக கட்டி முடிக்க வேண்டும். தென்னை விவசாயிக ளின் நலன் கருதி ரேசனில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். கோரியும், குறித்த தேங்காய் இனி அரசு கொள்முதல் செய்ய கோரியும், தென்னை வளர்ச்சி வாரிய அலுவல கம் கோவையில் அமைக்க வேண் டும். அரசு சட்டக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி உருவாக்க கோரியும், 2006 வன உரிமைச் சட்டத் தின் படி திருமூர்த்தி மலைவாழ் மக் கள் சாலை வசதி செய்து தரக் கோரி யும், திருப்பூர் மாவட்ட தொழிலாளர் சட்ட சமூக பாதுகாப்பை உறுதிப்ப டுத்தி தொழிலாளர் நலன்களை பாது காக்க கோரியும், திருப்பூர் மாவட்ட சிறுகுறு தொழில்களை பாதுகாக்க ஜிஎஸ்டி வரி மின்கட்டண சுமையை குறைக்க கோரியும், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் பாசன நிலங் களை பாசனம் பெற கால்வாய்களை புணரமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.