districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

போக்சோவில் கைது

சேலம், செப்.28- கல்லூரி மாணவி குளிப் பதை விடியோ எடுத்த இளை ஞரை போக்சோவில் சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளார்.  சேலம் நெத்திமேடு ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கொண்டலாம்பட்டி பகுதி யில் செயல்பட்டு வரும் தனி யார் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில் அன்ன தானப்பட்டி கண்ணகி தெரு  பகுதியைச் சேர்ந்த தேவாஸ் கூலித் தொழிலாளியான இவர், கல்லூரி மாணவி குளிக்கும் போது விடியோ எடுத்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவி பெற்றோர்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித் தார். புகாரின் அடிப்படையில்,   சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டதில், மாணவி குளிக்கும்போது விடியோ எடுத்தது உறுதியானது. இதனையடுத்து தேவாஸ் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு சேலம்  மத்திய சிறையில் அடைக் கப்பட்டார். 

குட்கா பறிமுதல்

இளம்பிள்ளை, செப்.28- சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்துள்ள வைகுந்தம் சுங்கச்சாவடி வழியாக குட்கா போதை பொருட்களை சிலர் காரில்  கடத்தி செல்வதாக சங்ககிரி  காவல் துறைக்கு தகவல்  கிடைத்தது. செவ்வாயன்று அதிகாலை வாகன தணிக் கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூன்று கார்களை சோதனை செய்தபோது, தடைசெய்யப்பட்ட 633  கிலோ போதை பொருட்களையும் காவல் துறையினர் பறி முதல் செய்தனர். இதுகு றித்து சங்ககிரி காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து, தப்பி சென்றவர்களை தீவிர மாக தேடி வருகின்றனர்.

புதுப்பிக்கப்பட்ட டீசல் என்ஜின்கள் குன்னூருக்கு வந்தன

அக்டோபர் மாதத்தில் இயக்க முடிவு 

உதகை, செப்.28- திருச்சி பொன்மலையிலிருந்து புதுப்பிக்கப்பட்ட டீசல் என்ஜின்கள் குன்னூருக்கு வந்தன. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2 ஆவது சீசனும் நடைபெறுகிறது. இந்த சீசனில் கேரளா, கர்நாடகா உட்பட  வெளிமாநிலங்கள் மற்றும் பிற  மாவட்டங்களில் இருந்து சுற்றுலா  பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக கோடை சீசனில் லட்சக் கணக்கானோர் வந்து செல்கிறார் கள். அவ்வாறு வருபவர்கள் மலை  ரயிலில் பயணம் செய்ய ஆர்வம்  காட்டி வருகின்றனர். கோவை  மாவட்டம், மேட்டுப்பாளையத் திலிருந்து குன்னூர் வரை நீராவி பர்னஸ் ஆயில் என்ஜின் மூலம் மலை  ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணி கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வரு கின்றனர். இருப்பினும், கூட்டம் அதிகமாக இருக்கும் சமயங்களில் பெரும்பாலான சுற்றுலா பயணி கள் மலை ரயிலில் பயணம் மேற் கொள்ள முடியாத நிலை உள்ளது.  குன்னூர் - உதகை இடையே டீசல்  என்ஜின் மூலம் மலை ரயில் இயக் கப்படுகிறது. இதில் 2 என்ஜின்கள் பராமரிப்பு பணிகளுக்காக திருச்சி  பொன்மலை ரயில்வே பணி மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.  அங்கு 2 டீசல் என்ஜின்களில் பரா மரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட  நிலையில், அந்த பணிகள் நிறைவு  பெற்றது. இதையடுத்த குன்னூர்  பணிமனைக்கு புதுப்பிக்கப்பட்ட டீசல் என்ஜின்கள் செவ்வாயன்று கொண்டு வரப்பட்டது. முன்னதாக நீராவி பர்னஸ் ஆயில் என்ஜின் மூலம்  பெட்டி இணைக்கப்பட்டு, அதற்கு பின்னால் டீசல் என்ஜின்கள் இணைத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது. வரும் அக்டோபர் மாதம் 2 ஆவது  சீசன் தொடங்கவுள்ளது. இதை யொட்டி சுற்றுலா பயணிகள் வசதிக் கேற்ப புதுப்பிக்கப்பட்ட டீசல் என்ஜின்கள் மூலம் மலை ரயில் இயக்கப்பட இருக்கிறது. மேலும், தடையின்றி மலை ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் உலக வங்கி அதிகாரிகள் ஆய்வு

சேலம், செப்.28- சேலம் அரசு மருத்துவமனையில் உலக வங்கி அதிகாரிகள் செவ்வா யன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை  பிரிவு உலக வங்கியிடம் இருந்து கடன்  பெற்று செயல்பட்டு வருகிறது. எனவே,  இந்த சிகிச்சை பிரிவின் செயல்பாடுகள்  எப்படி உள்ளது என்பது ஆய்வு செய்ய  உலக வங்கி அதிகாரிகள் அடங்கிய குழு செவ்வாயன்று சேலம் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.  இதில், உலக வங்கியின் முதுநிலை  கண்காணிப்பாளர்கள் தினேஷ் நாயர்,  ஆருசிபட்நாயக், சிபில் கிறிஸ்டல் மற்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அலுவலர் பவானி உமாதேவி ஆகி யோர் அடங்கிய குழுவினர், மருத்துவ மனையில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கு, அவசர சிகிச்சை பிரிவு, ரத்த  வங்கி, எலும்பு முறிவு சிகிச்சை மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து, உலக வங்கி யிலிருந்து மருத்துவமனைக்கு ஒதுக் கப்பட்ட நிதி முறையாக செலவு செய் யப்படுகிறதா? என்பது குறித்தும்  ஆய்வு நடத்தினர். இதன்பின் மருத்துவ மனை முதல்வர் வள்ளிசத்தியமூர்த்தி, கண்காணிப்பாளர் தனபால் ஆகி யோரிடம் நோயாளிகளுக்கு அளிக் கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்தனர். இதையடுத்து அந்த குழு செய்தி யாளர்களிடம் கூறுகையில், சேலம்  அரசு மருத்துவமனைக்கு ஒதுக்கப் பட்ட நிதி முறையாக செலவு செய்யப் பட்டு வருகிறது. உயர்தர தனியார் மருத்துவமனையை போன்று, சேலம்  அரசு மருத்துவமனை பராமரிக்கப்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை உள்பட அனைத்து வகையான சிகிச்சைகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது, என்றனர். 

அணைப்பாளையம் பாலம் பணி: நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை

திருப்பூர், செப். 28 - திருப்பூர் மாநகராட்சி அணைப்பாளையம் பாலம் கட்டும்  பணி 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இணைப்புச் சாலை களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் வழக்கு இருந்த கார ணத்தால், கடந்த 14 ஆண்டு காலமாக இப்பணி நிலுவையில்  உள்ளது.  இந்நிலையில், பாலம் அமையும் பகுதியில் உள்ள நில உரி மையாளர்களிடம் செவ்வாய்க்கிழமை துணை மேயர் எம்.கே. எம். ஆர்.பாலசுப்பிரமணியம் சமாதானப் பேச்சுவார்த்தை  நடத்தினர். இதையடுத்து இறுதிக் கட்டமாக அளவீடு செய்யும்  பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

ரேஷன் கடைகளில் வருகை பதிவேடு சிஐடியு கோரிக்கை

திருப்பூர் செப். 28 - திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பண்டக சாலை நடத்தும்  நியாய விலை கடைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு  ரேஷன் கடையிலேயே வருகை பதிவேடு பராமரிக்க திருப்பூர்  மாவட்ட கூட்டுறவு பணியாளர்கள் சங்கம் (சிஐடியு) கேட்டுக்  கொண்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு பணியாளர் சங்கத்தின் மாவட்ட  தலைவர் ப.கௌதமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  கூறியிருப்பதாவது: 15 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள நியாய விலை கடைகளுக்கு நடுவே தலைமை அலுவலகம் உள்ளது. குறிப்பாக திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், தார் ரோடு, பாலம் மற்றும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின் றன. இந்நிலையில், இங்கு பணியாற்றும் ஊழியர்கள் உடு மலை, தாராபுரம், பல்லடம் உள்ளிட்ட பகுதியிலிருந்து வரு கின்றனர்.  மற்ற பணியாளர்களுடன்  மாற்றுத் திறனாளிகள்  5 பேரும், கொரோனா பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் 8 பேரும்  உள்ளனர். மேலும், தலைமை அலுவலகத்திற்கு வரக்கூடிய நியாய விலைக் கடை பணியாளர்கள் இரண்டு அல்லது மூன்று  பேருந்துகள் மாறி வர வேண்டிய நிலை உள்ளது. தலைமை  அலுவலகத்தில் கையெழுத்து மற்றும் விற்பனை பணத்தை கட்டிவிட்டு வீட்டுக்கு செல்லும்பொழுது வெளியூரில் இருந்து வரக்கூடிய பணியாளர்கள் இரவு 9 மணிக்கு மேல் வீட்டுக்கு  செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் தலைமை அலுவ லகத்தில் பணம் வந்து கட்டும்போது 30 படிக்கட்டுகளுக்கு  மேலாக உள்ளதால் மாற்றுத்திறனாளிகள் மற்றும்  கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் படி ஏற முடியாதபடி பரி தவிக்கின்றனர். ஆகவே வருகை பதிவேடுகளை கடைகளி லேயே வைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் வடக்கு பகுதியிலும், தெற்கு பகுதியிலும் பணத்தை பெறுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கம் (சிஐடியு) கேட்டுக் கொண்டுள்ளது.

விவசாயிகளுக்கு பனை விதைகள்

திருப்பூர், செப். 28 - தோட்டக் கலை, மலைப்  பயிர்கள் துறையின் சார்பில்  பனை மேம்பாட்டு இயக்கத் தின் கீழ் விவசாயிகளுக்கு பனைவிதைகள் மானியத் தில் வழங்கப்படுகிறது. பனை சாகுபடியை ஊக்கு விப்பதற்கும், விவசாயிக ளின் வாழ்வாதாரத்தை மேம் படுத்தவும் பனை மேம்பாட்டு  இயக்கத்தின் மூலம் திருப் பூர் மாவட்டத்தில் 100 சதவீத  மானியத்தில் 25 ஆயிரம் பனை விதைகள் விவசாயிக ளுக்கு வழங்கப்பட உள்ளது.  இத்திட்டத்தின் கீழ் ஒரு விவ சாயிக்கு, அதிகபட்சமாக  50  பனை விதைகள் வழங்கப்ப டும். இதற்கு தோட்டக்கலை  அலுவலர்களை அணுக லாம் என ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளார்.

முன்கூட்டியே வினாத்தாள் வழங்கல் தலைமையாசிரியர் தற்காலிக நீக்கம்

ஈரோடு, செப்.28- காலாண்டு தேர்வு வினாத்தாளை மாணவ, மாணவிக ளுக்கு முன்கூட்டியே வழங்கிய தலைமையாசிரியர் தற் காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.  ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சி, காமராஜர் நகர் நடுநிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாண விகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் தமிழ் ஆசிரியராக கிருஷ்ணகுமாரி பணிபுரிந்து வரு கிறார். திங்களன்று காலாண்டு தேர்வு நடத்தப்பட்டன. இதில், தமிழ் பாடத்துக்கு 6 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு நடந்த தேர்வின் கேள்வித் தாளை முன்னதாகவே மாணவ, மாணவிகளுக்கு வழங்கி தேர்வு எழுதுமாறு கூறியுள்ளார். மேலும், விடைகளை  பாட நோட்டுகளை பார்த்து எழுதுமாறு கூறியதாகவும் தெரி கிறது.  இத்தகவல் பள்ளி மேலாண்மை குழுவுக்கு கிடைத்தது. சம்பவ இடத்துக்கு மேலாண்மை குழு நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள் மோகன்ராஜ், குமார் மற்றும் பெற்றோர்கள் சென்று பார்த்தனர். தலைமையாசிரிடம் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து, விசாரணை நடத்திய ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி,தேர்வை முறையாக நடத்தாத  பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணகுமாரியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் கல் வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு

சேலம், செப்.28- காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரி யில் செவ்வாயன்று 14,000 கனஅடியாக இருந்த புதனன்று 14,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து அதை அளவில் நீடிக் கிறது.   இதேபோல், மேட்டூர் அணைக்கு செவ்வாயன்று காலை யில் 11,368 கனஅடியாகவும், மாலை 12,144 கனஅடியாக வும் நீர்வரத்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நீர் வரத்து விநாடிக்கு11,700 கனஅடியாக சரிந்துள்ளது. அணை யில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு செவ்வாயன்று காலை 12,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலை யில், மாலை முதல் நீர்திறப்பு 900 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத் திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் செவ்வாயன்று காலை 118,68 அடியாக இருந்த நீர்மட்டம், புத னன்று  118,70 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 91.41 அடியாக டிஎம்சியாக உள்ளது.

பூக்கள் விலை சரிவு: விவசாயிகள் வேதனை

பூக்கள் விலை சரிவு: விவசாயிகள் வேதனை ஈரோடு, செப்.28- வரத்து மற்றும் தேவை குறைந்துள்ள காரணத்தால் மல் லிகை மற்றும் முல்லை பூக்களின் விலை சரிந்துள்ளது. இத னால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், சிக்கரசம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் மல்லிகை, முல்லை உட்பட பல்வேறு பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதிகளி லிருந்து பூக்களை பறித்து சத்தியமங்கலத்தில் செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வியாபாரிகள் கொள்முதல் செய்து தமிழகத்தின் பல்வேறு  பகுதிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். மேலும் கேரளா, ஆந்திரா என வெளி மாநில வியாபாரிகளும் வந்து பூக்களை மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் பண்டிகை தினங்களில் தேவை அதிகரித்து, பூக்களின் விலை யும் அதிகமாக இருக்கும். இதற்கிடையே கடந்த மாதம் ஓணம் பண்டிகை மற்றும் திருமண நாட்கள் தொடர்ந்து வந்தது. இதை யொட்டி கேரளா மாநிலத்திற்கு அதிகளவு பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால், கடந்த மாதம் மல்லிகைப்பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சத்தியமங்கலம் பகுதியில் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், பண்டிகை மற்றும் திருமண நாட் கள் இல்லாததால் பூக்களின் தேவை தொடர்ந்து குறைந்து  வருகிறது. தற்போது வெப்பகால நிலை நிலவுவதால் பூக்கள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இதனால் தேவையை விட உற்பத்தி அதிகமாக உள்ளதால், விலையும் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மாதம் ரூ.2 ஆயிரத்துக்கு மேல்  விற்கப்பட்ட மல்லிகைப்பூ, கடந்த சில நாட்களாக ரூ.600க்கு விற்பனையானது. இந்நிலையில், சத்தியமங்கலம் மார்க் கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்தது. ஆனால், பூக்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் பலர் வராததால், தற்போது 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.300க்கு விற்பனையானது. இதேபோல் ரூ.300க்கு விற்பனை செய்யபப்ட்ட முல் லைப்பூ ரூ.100 ஆக குறைந்தது. மேலும், மற்ற பூக்களின் விலையும் குறைந்ததால், விவசாயிகள் வேதனை அடைந் துள்ளனர்.

லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

ஈரோடு, செப்.28- லஞ்சம் வாங்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் காவல் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் செவ்வாயன்று தீர்ப்ப ளித்தது.  ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை காவல் நிலையத்தில் கடந்த 2009-ல் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவர் வி.சந்தி ரன் (58). இவர், வாகனச் சோதனையின் போது அம்மாபேட்டை ஆதிதிராவிடர் கால னியைச் சோ்ந்த செல்லமுத்துவைப் பிடித்து விசாரித்தார். அப்போது அவருடைய அசல் ஓட்டுநர் உரிமத்தை வாங்கிக்கொண்டாராம். உரிமத்தை செல்லமுத்து திருப்பி கேட்ட தற்கு ரூ.500 லஞ்சம் கொடுக்குமாறு கூறியுள் ளார். இதனால், செல்லமுத்து ஈரோடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீ ஸில் புகார் அளித்தார். அவர்களின் ஆலோ சனையின்பேரில், கடந்த 2009 பிப்ரவரி 4  ஆம் தேதி 500 ரூபாயை சந்திரனிடம் லஞ்ச மாக செல்லமுத்து கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீ சார் சந்திரனை கைது செய்தனர். ஈரோடு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதித்துறை நடுவர் சரவணன் செவ்வாய்க் கிழமை தீர்ப்பளித்தார். இதில், காவல் உதவி ஆய்வாளர் சந்திரனுக்கு 2 பிரிவுகளின் கீழ்  தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா  ரூ.5000 அபராதம் விதித்து, தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். சந்திரன், கடந்த 2009 இல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைதீர் கூட்டம்

தருமபுரி, செப்.30- தருமபுரி மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செப்.30 ஆம்  தேதியன்று நடைபெற உள் ளது. இதில், வேளாண்மை தொடர்பான தங்களது கோரிக்கைகளையும், கருத் துகளையும் தெரிவிக்கலாம் என விவசாயிகளுக்கு தரும புரி ஆட்சியர் கி.சாந்தி தெரி வித்துள்ளார்.

கோவையில் குழந்தை தொழிலாளர் மீட்பு

கோவை, செப்.28- கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த இடிகரை சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் உள்ளதாக ஆட்சி யர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேசிய குழந்தைகள் நல திட்ட அதிகாரிக ளுக்கு புகார் வந்தது. அதன்படி குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்கு நேரில் சென்று அதி காரிகள் சோதனை செய்தனர். அப்போது அங்கு 16 வயதுடைய சிறுவன் பணிக்கு அமர்த்தியது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை அதிகாரிகள் மீட்டு, இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலை யத்தில் புகாரளித்தனர். அதன்பேரில், காவல் துறையினர் சாய்பாபா கோவில் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் அர விந்த் என்பவர் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மனைவி கொலை - கணவருக்கு ஆயுள் 

ஈரோடு, செப்.28- மனைவியின் மீது சந்தேகமடைந்து வெட்டிக் கொன்ற  கணவருக்கு ஈரோடு மகளிர் நீதி மன்றம் ஆயுள் தண் டனை விதித்தது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே பெரு மாள்மலை பகுதியில் வசித்து வந்த தீபரஞ்சனி (24). கே.எஸ்ஆர் கல்லூரியில் படிக்கும்போது அதே கல்லூரியில் பயின்று வந்த விவேகானந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  பின்னர் இரண்டு ஆண்டுகளாக இருவரும் தங்கி இருந்தனர். அதன்பிறகு தீபரஞ்சனியும் அவரது கணவரும் ஈரோடு, டீச்சர்ஸ் காலனி, ஒளவையார் வீதி குடிபெயர்ந்த னர். விவேகானந்தன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தீபரஞ்சனி ஈரோட்டில் தனியார் காப்பீடு திட்டத் தில் அலுவலராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீப ரஞ்சனி சமையல் செய்யும் போது ஜன்னலை திறந்து வைத்து  யாரையோ பார்க்கிறாய் என்று சந்தேகப்பட்டு திட்டி அடித் துள்ளார். இதனையடுத்து தீபரஞ்சனி வீட்டைவிட்டு வெளி யேறினார். விவேகானந்தன் வீட்டில் இருந்த கத்தியை எடுத் துக் கொண்டு வெளியே சென்று கொண்டிருந்த தீபரஞ் சனியை முதுகில் கத்தியில் ஓங்கி குத்தினார். பின்னர் ஆத்தி ரம் அடங்காமல் தலை, இதயம் என மாறி மாறி குத்தி யுள்ளார். இதில் தீபரஞ்சனி பலத்த காயங்களுடன் அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.  இதனையடுத்து 108 ஆம்புலன்ஸில் ஏற்றி தீபரஞ் சனியை ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரி சோதித்த மருத்துவர் தீபரஞ்சனி இறந்து விட்டதாகக் தெரி வித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தெற்கு காவல் துறை யினர் விசாரித்து வந்தனர். வழக்கு விசாரணை ஈரோடு மக ளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி ஆர்.மாலதி புதனன்று தீர்ப்பு வழங்கி னார். அதில் விவேகானந்தனுக்கு (27) ஆயுள்  சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேலும் அபராத தொகை ரூ.5000 செலுத்த வேண்டும் எனவும், அபராதத்தொகை கட்ட தவறினால் 3 மாத  கால சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தர விட்டார்.

கொலை குற்றவாளிக்கு ஆயுள் 

கோவை, செப். 28 - தடாகம் பகுதியில் வசிச் பவர் வெள்ளிங்கிரி (52). இவர் குடிபோதையில்  கடந்த 01.03.2021 ஆம் தேதியன்று அதே பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் (25) என்ப வரை மரக்கட்டையால் அடித்து கொலை செய்தார். இந்த குற்றத்திற்காக  தடா கம் காவல் நிலையத்தில் வெள்ளிங்கிரி (52)  மீது கொலை வழக்கு பதிவு செய் யப்பட்டது.  இவ்வழக்கு கோவை குண்டு வெடிப்பு சிறப்பு  நீதிமன்றத்தில் விசா ரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவுபெற்று புதனன்று வெள்ளிங்கிரிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1000 அபராதமாக விதித்து  நீதிபதி தீர்ப்பு வழங்கினார். 

;