திருப்பூர், ஏப்.15- திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில், தூய்மை வாகன ஓட்டு நர்களின் பணி நிலைமையை முறைப் படுத்தி, சட்டப்படி ஊதியம் வழங்கக் கோரி அந்த தொழிலாளர்கள் சிஐடியு தலைமையில் மண்டல உதவி ஆணை யரிடம் நேரில் முறையிட்டனர். திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் தூய்மைப் பணி வாக னங்களின் ஓட்டுநர்களாக 45க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வரு கின்றனர். இவர்களில் பெரும்பாலா னோர் ஒப்பந்த தொழிலாளர் ஆவர். சமீப காலமாக அவர்களுக்கு அதிக வேலை நேரம், குறைவான ஊதியம், வாகன பழுதுகளை ஓட்டுநர்களே பாத்துக் கொள்ள வேண்டும் என சொல்வது, மேற்பார்வையாளரின் அச்சுறுத்தல் என பல வகை நெருக் கடிகளுக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் புதனன்று காலை அந்த ஓட்டுநர்கள் சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் தலைமையில் திருப்பூர் முதலாவது மண்டல உதவி ஆணை யர் சுப்பிரமணியத்தை நேரில் சந் தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது சுகாதாரப் பணிகள் அலு வலர் ராஜேந்திரனும் உடன் இருந் தார். தூய்மை பணி வாகன ஓட்டுநர் கள் மதிய உணவுக்கு கூட செல்ல முடியாமல் இருக்கும் நிலையில் வேலை நேரத்தை முறைப்படுத்த வும், மாவட்ட ஆட்சியர் அறிவித்த அரசாணைப்படி ஊதியம் வழங்க வும், தூய்மை வாகனப் பழுதுகளை மாநகராட்சி நிர்வாகமே சரி செய்து தரவும், ஓட்டுநர்களைப் பழிவாங்கா மல், பாரபட்சம் இல்லாமல் உரிய அணுகுமுறை கடைப்பிடிக்கவும் அதிகாரிகளிடம் சிஐடியு சார்பில் வலி யுறுத்தப்பட்டது. இவர்கள் பணி நிலைமையை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உதவி ஆணையர் சுப்பிர மணியம், சுகாதார அலுவலர் ராஜேந் திரன் ஆகியோர் உறுதியளித்தனர். இதையடுத்து ஓட்டுநர்கள் அனை வரும் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதி களில் தூய்மைப் பணி மேற்கொள்ள வாகனங்களை எடுத்துச் சென்றனர்.