சேலம், பிப்.21- புதிய நிரந்தர பணி நியமனங்கள் செய்யக்கூடாது என போடப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய வலி யுறுத்தி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து பணி மனைகள் முன்பு சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் மற்றும் அரசு விரைவு போக்கு வரத்து தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு போக்குவரத்து துறையில் புதிய நிரந்தர பணி நிய மனங்கள் செய்யக்கூடாது என்று 322, 115, 139, 152 போடப்பட்டுள்ள அரசா ணைகளை ரத்து செய்ய வேண்டும். மாடல் எம்பிளாய் செயல்பட வேண் டிய அரசு, கார்ப்பரேட் மாடலாக செயல்படுகிறது என குற்றஞ்சாட்டி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில், சாலை போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன், அரசு விரைவு போக்குவரத்து சிஐ டியு சங்க மாநில துணைத்செயலாளர் முருகேசன், மாநில உதவிச்செய லாளர் பி.செல்லப்பன், சாலை போக்குவரத்து சங்க பொதுச்செய லாளர் முருகேசன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் உதயகுமார் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றி னர்.