districts

img

வளர்ந்து வரும் பல்லடம் ஒன்றியத்தின் உரிமைக் குரலாக செயல்படும் மார்க்சிஸ்ட் கட்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பல்லடம் தாலுகா குழு ஆரம்பத் தில் சுல்தான்பேட்டை, சூலூர் ஆகிய ஒன்றியங்களை உள்ளடக்கியதாக ஒரு பரந்த கமிட்டியாக செயல்பட்டு வந்தது. தற்போது மாவட்ட பிரிவி னைக்கு பின்னால் 20 கிராம ஊராட் சிகள், சாமளாபுரம் பேரூராட்சி, பல் லடம் நகராட்சி உள்ளடக்கி பல்லடம் ஒன்றிய குழுவாக செயல்பட்டு கொண்டுள்ளது. பல்லடம் தாலுகாவின் ஒரு பகுதி யில் விவசாயமும், விசைத்தறி, பனி யன் உள்ளிட்ட தொழில்களும், கோடாங்கிபாளையம், இச்சிப்பட்டி, பூமலூர், 63 வேலம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் கல் குவாரி தொழிலும் உள்ளன.  பல்லாயிரக்கணக்கான தொழிலா ளர்களுக்கு வாழ்வளிக்கும் தொழி லாக விசைத்தறி தொழில் பல்லடத் தில் பிரதானமாக உள்ளது. வெளி மாவட்ட, மாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இத்தொழி லில் ஈடுபட்டு வருகின்றனர்.

விசைத்தறி தொழில்

விசைத்தறி தொழிலிலை பாதித்த சென்வாட் வரி பிரச்சி னைக்கு எதிராக ஒரு வலுவான போராட்டத்தை பல்லடம் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது. சோம னூர், கோம்பக்காடு உள்ளிட்ட பகுதி களில் விசைத்தறி தொழில் பாது காப்பு மாநாடுகளை கடந்த காலங்க ளில் நடத்தி மத்திய, மாநில அரசுக ளின் கவனத்தை ஈர்த்து தொழிலை தக்க வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து நடத்தி வந்துள்ளது. விசைத்தறி தொழிலுக்கு எப்பொழுதெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறதோ அந்த சம யத்தில் தொழிலையும் - தொழிலா ளர்களையும் பாதுகாத்திட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன் வரிசை யில் நின்று பல கட்ட போராட்டங் களை நடத்தியுள்ளது. விசைத்தறி தொழிலாளர்க ளுக்கு கூலி உயர்வு, அரசு நலத்திட் டங்கள் என பல்வேறு பிரச்சினைக ளில் தொடர்ந்து தலையீடு செலுத்தி  வருகிறது. 1995இல் நடுவேலம் பாளையம் பகுதியில் நியாயமான போனஸ் கேட்டு வேலைநிறுத்தம், நடைபயணம், காலவரையற்ற உண் ணாவிரதம் என தொடர்ந்து போராட் டங்களை நடத்தப்பட்டது. காலவரை யற்ற உண்ணாவிரதம் இருந்த தொழிற்சங்க தலைவர்கள், தொழி லாளிகள் மீது வழக்கு போடப்பட்டு இந்த வழக்கு நீதிமன்றத்தில் நீண்ட நாட்கள் நடைபெற்றது. அதில், தொழிற்சங்க உரிமை போராட்டம் வெற்றி அடைந்து அனைவரும் வழக்கிலிருந்து விடுதலை செய்யப் பட்டனர். பல்லடம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் என்பது இந்த போராட்டத்தின் மூலம் முதன்முத லாக தொழிலாளர் நல அலுவலர் மூலமாக விசைத்தறியாளர்கள், விசைத்தறி தொழிலாளர் சங்கத் திற்கு இடையே ஒப்பந்தம் போடப் பட்டது. 

விவசாயிகளை பாதுகாத்திட 

விவசாய நிலங்கள் உயர்மின் கோபுரங்களால் துண்டாடப்பட்டு விவசாயிகள் பாதிப்படைந்தபோது தொடர் போராட்டம் நடத்தப்பட் டது. அதன் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை பெற்றுக் கொடுக்கப்பட் டுள்ளது. பல்வேறு திட்டங்களின் மூலம் விவசாய நிலங்களை சூறை யாடுவதை அரசு தொடர்ந்து கொண் டிருக்கிறது. உயர் மின் கோபுரங்கள், எரிவாயு குழாய் திட்டங்களால் பல்ல டம் பகுதியில் விவசாய நிலங்கள் பறி போவதை தடுக்க பல போராட்டங் கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாக்க 

அனுப்பட்டி கிராமத்தில் தனி யார் இரும்பாலை வெளியேற்றும் புகையினால் அந்த கிராமத்தில்  பொதுமக்கள், கால்நடைகள்  பல்வேறு பாதிப்புகளுக்கும், வியாதிகளுக்கு உள்ளாகினார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் தலைமையில் பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பாக ஆயி ரத்துக்கும் மேற்பட்ட கிராம மக் களை திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

நில மீட்புப் போராட்டங்கள்

நடுவேலம்பாளையம் கிராமத் தில் பஞ்சமி நில மீட்புப் போராட்டம் நடத்தப்பட்டு நிலம் விற்பனை நிறுத் தப்பட்டது. வடுகபாளையம் கிராமத் தில் பூமி தான நிலம் மீட்பு போராட் டம், கைத்தறி நெசவாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்க ளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டது இந்த இடத்தில் உரிய முறையில் பய னாளிகளுக்கு பிரித்து தர வலியு றுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. கணபதிபாளையம் கிராமத்தில் அரசு வழங்கிய வீட்டுமனை இடங் களை முறையாக அளவீடு செய்து சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்க வலியுறுத்தி கணபதிபாளை யம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் வரை தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் அப்போதைய மாநில தலைவர் பி.சம்பத் தலைமையில் நடைபயணம் மேற்கொண்டதால், வருவாய் துறை பயனாளிகளுக்கு உடனடியாக அந்த இடத்தை பிரித் தளிப்போம் என்று அறிவித்தது.

இன்றைய சூழலில்

கொரோனா பொது முடக்கக் காலத்தில் மருத்துவமனைக்கு உப கரணங்கள் வாங்கிக் கொடுத்தது பசித்திருந்தவர்களுக்கு தொடர்ந்து பல வாரங்கள் உணவு சமைத்து வழங்கப்பட்டது. வளர்ந்து வரக் கூடிய பல்லடம் நகரில் அதன் தேவைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு தீர்மானங்கள் ஒன்றிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டு அதற்கான இயக்கங்கள் தொடர்ச்சியாக முன் னெடுக்கப்படுகிறது. கோவை - திருச்சி, கோவை- மதுரை, திருப்பூர் - உடுமலை,  திருப் பூர் - பொள்ளாச்சி என முக்கியமான  நெடுஞ்சாலையின் மையப் பகுதி யாக பல்லடம் நகரம் உள்ளது. ஆனால் இதற்கேற்ப போக்குவ ரத்து வசதி உருவாக்கப்பட வில்லை, கடும் போக்குவரத்து நெருக்கடியை இந்நகரம் தொடர்ந்து  சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்ந கரில் பனப்பாளையம் முதல் அண்ணா நகர் வரை மேம்பாலம் கட்ட வேண்டும்.

 நகரைச் சுற்றி  சுற்றுச் சாலை அமைக்க வேண்டும்.    பல்லடம் அரசு மருத்துவமனை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட வேண்டும். விபத்து அவசர சிகிச்சை மையத்தை உடன டியாக துவக்க வேண்டும். அரசு  மருத்துவமனைக்கு தேவையான தொழில்நுட்ப பணியாளர்கள் மற் றும் சுகாதாரப் பணியாளர்களை உட னடியாக பணியமர்த்த வேண்டும். இந்நகரில் போக்குவரத்து, மகளிர், சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்க ளில் கூடுதலான காவலர்களை நிய மிக்க வேண்டும். வளர்ந்து வரும் பல் லடம் நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப உள் கட்டமைப்பை பலப்படுத்த வேண் டும். பல்லடத்தின் தென்மேற்கு ஊராட்சிகளான கிருஷ்ணாபுரம், மல்லே கவுண்டம்பாளையம், கரடி வாவி, பருவாய், அனுப்பட்டி, புளி யம்பட்டி, பணிக்கம்பட்டி, கோடாங் கிபாளையம், செம்மிபாளையம், சுக் கம்பாளையம், பூமலூர் ஆகிய ஊராட்சிகள் வறட்சிக்கு இலக்கா கும் பகுதிகளாக உள்ளன. வறட்சி  காலங்களில் இந்த ஊராட்சிகளில் குடிநீருக்கு கடும் நெருக்கடி ஏற் படுகிறது. விவசாயிகள் கால்நடை களுக்கும் தண்ணீர் இல்லாமல் சிர மப்படும் சூழல் உள்ளது. எனவே  சூலூர் குளத்திலிருந்து உபரியாக வெளியேறும் நீரை இந்த ஊராட் சிகள் பயன்பெறும் வகையில் குளம், குட்டைகளுக்கு தண்ணீர் விட உரிய  நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். விசைத்தறி ஜவுளி சந்தை, விசைத்தறிகளை மேம்படுத்த உரிய  தொழில்நுட்ப பயிற்சி ஆகியவை அளித்திட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும். பல்லடம்  மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனை களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும்.
 

;