districts

வாலிபர் சங்க தலைவர்கள் மீது சமூக விரோதிகள் தாக்குதல் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் பொதுமக்கள் போராட்டம்

சேலம், ஜன.1- தாதகாப்பட்டி அருகே இந்திய  ஜனநாயக வாலிபர் சங்க தலை வர்கள் மீது தொடர் தாக்குதலில் ஈடு பட்டு வரும் சமூக விரோதிகள் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகரம், தாதகாப்பட்டி  அருகே உள்ள மூணாங்கரடு பகுதி யைச் சேர்ந்த சிலர், சமூக விரோத  செயல்களில் ஈடுபட்டு வருகின்ற னர். குறிப்பாக, மிரட்டுவது, அடிப் பது உள்ளிட்ட செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் கஞ்சா உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற் பனை செய்து வருவதை வழக்க மாக கொண்டுள்ள இவர்கள், அப் பகுதியில் உள்ள இளைஞர்களை தாக்கி வருவது வாடிக்கையாக உள்ளது. மேலும், சமூக விரோதி களின் இந்த சட்டவிரோத நடவடிக் கையை தொடர்ந்து இந்திய ஜன நாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் அம்பலப்படுத்தி வருவதால், ஆத்திரமடைந்த கும்பல் வாலிபர் சங்க நிர்வாகிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.  இந்நிலையில், டிச.30 ஆம் தேதி யன்று அப்பகுதியைச் சேர்ந்த சமூக  விரோதிகள், வாலிபர் சங்க நிர்வா கிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ள னர். இதனால் படுகாயமடைந்த இவர்கள், சேலம் அரசு மோகன்  குமாரமங்கலம் மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர். அவர்களின்  பெற்றோரிடம் எந்த வழக்கும் போடக்கூடாது. உயர் சிகிச்சை  வேண்டுமென்றால் வேறு மருத்து வமனையில் செய்து கொள்ளுங் கள் என மிரட்டியுள்ளனர். இது சம் பந்தமாக இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் பெரியசாமி அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித் துள்ளார். அதன்பேரில் உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என போலீ சார் உறுதியளித்தனர். இந்நிலையில், ஞாயிறன்று வாலிபர் சங்க நிர்வாகி சதீஷ் மீது  கொடூர தாக்குதல் நடைபெற் றுள்ளது. மேலும், மருத்துவமனை யில் உள்ள இருவரையும் வீட் டிற்கு வர சொல்ல வேண்டும். எந்த  புகாரும் தங்கள் மீது கொடுக்கக்கூ டாது என மிரட்டி, கண்மூடித்தன மான தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் ஆவேசமடைந்த அப் பகுதி பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை யில் மூணாங்கரடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது, இப்பகுதியில் தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடு பட்டு வரும் நபர்கள் மீது காவல் துறை உடனடி நடவடிக்கை எடுக்க  வேண்டும். வேலைக்கு சென்று  திரும்பும் இப்பகுதி இளைஞர்க ளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆவேச  முழக்கங்களை எழுப்பினர்.