districts

img

மின் கட்டண உயர்வை செலுத்தாமல் போராட்டம்: வேலை நிறுத்தம் செய்யவும் விசைத்தறியாளர்கள் முடிவு

திருப்பூர், செப்.11- சாதா விசைத்தறிக்கு அரசு உயர்த்தி அறி வித்துள்ள மின் கட்டணத்தை செலுத்தாமல் போராட்டம் நடத்துவது, இந்த கட்டண உயர் வில் முழு விலக்கு கோரி விசைத்தறி வேலை  நிறுத்தப் போராட்டத்தை நடத்துவது என்று  கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க  கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு  நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் கள் சங்க கூட்டமைப்புக் கூட்டம் செப்டம்பர்  11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சோமனூர்  சங்க அலுவலகத்தில் சோமனூர் சங்கத் தலை வர் சி.பழனிச்சாமி தலைமையில், அவிநாசி சங்கத் தலைவர் என்.எம்.முத்துசாமி, தெக்க லூர் சங்கத் தலைவர் பி.பொன்னுசாமி ஆகி யோர் முன்னிலையில் நடைபெற்றது. கடந்த எட்டு ஆண்டுகளாகவே விசைத் தறியாளர்கள் கூலி உயர்வு இல்லாமல் அவர் களது குடும்ப வாழ்வாதாரம் மிக கஷ்டமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் மின் கட்ட ணத்தை உயர்த்த உத்தேசித்துள்ளதாக அறி விப்பு வந்தவுடன் இரு மாவட்ட கூட்டுக் கமிட்டி சார்பில் தமிழக முதல்வர், அமைச்சர் கள், ஆணையத் தலைவர், மின்வாரியத் தலைவர் அனைவருக்கும் இந்த மின் கட்டண உயர்வில் இருந்து முழு விலக்கு அளிக்க கோரிக்கை மனு அனுப்பியதுடன், சென் னைக்குச் சென்று அவர்களை நேரில் சந் தித்தும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. எனினும் சாதா விசைத்தறிக்கு அபரிமிதமாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அபரிமித மின் கட்டண உயர்வை  விசைத்தறியாளர்கள் எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாது. எனவே சாதா விசைத்தறி III ஏ 2வுக்கு உயர்த்தியுள்ள 0.70, 1.05, 1.40 கட்டண உயர்வை முழுமையாக விலக்கு  அளிக்க வேண்டும். செப்டம்பர் 10ஆம் தேதி  முதல் உயர்த்தியுள்ள மின் கட்டணத்தை விசைத்தறியாளர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக முழுமையாக கட்டாமல் இருந்து எதிர்ப்பைத் தெரிவிக்கவும் ஒருமனதாக தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த காலங்களில் சாதா விசைத்தறிக்கு மின் கட்டணம் பெரும் சுமையாக இருந்த காரணத்தால் மாபெரும் போராட்டங்கள் நடத்தி சாதா விசைத்தறிக்கு சிறு, குறு  தொழில் கட்டணப் பட்டியலில் இருந்து தனி யாகப் பிரித்து III ஏ 2 அமைத்துக் கொடுத்து அரசு விசைத்தறி தொழிலைப் பாதுகாத் தது. ஆனால் தற்போது அனைத்து சிலாப்பு களுக்கும் 30 சதவிகிதம் கட்டணம் உயர்வு செய்தால் இந்த தொழிலே அழிந்து விடும். அத்துடன் ஆண்டுக்கு 6 சதவிகித கட்டண  உயர்வு என்பது கூலிக்கு நெசவு செய்யும்  சாதா விசைத்தறித் தொழிலை முழுமை யாக அழித்துவிடும்.  கால் நூற்றாண்டுக்கு மேலாக அரசின் ஆ தரவான நிலை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. எனவே கடந்த காலத்தைப் போல விசைத்தறியாளர்களுக்கும், லட்சக்கணக் கான தொழிலாளர்களுக்கும் குடும்ப வாழ் வாதாரத்தைக் காப்பாற்ற அரசு உயர்த்தி அறிவித்துள்ள மின் கட்டண உயர்விலிருந்து  முழுமையாக விலக்கு அளித்து பாதுகாப் பாக இருக்க வேண்டும். உடனடியாக அந் தந்த பகுதி விசைத்தறிகளின் பொதுக்குழு வைக் கூட்டி விவாதித்து விசைத்தறிகளை நிறுத்திப் போராடுவதைத் தவிர வேறு வழி யில்லை. எனவே பொதுக்குழு முடிவின்படி போராட்டத் தேதியை அறிவிப்பது என்றும் தீர் மானிக்கப்பட்டது.

;