districts

img

மலை தேச மணிப்பூரிகளை பாதுகாத்திடு

சேலம், ஜூலை 25- மணிப்பூர் மாநில கலவரத்தை கட் டுப்படுத்த வலியுறுத்தியும், மோடி தலை மையிலான ஒன்றிய பாஜக அரசின் இய லாமையை கண்டித்து, மாணவர் சங் கம், அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் பல்வேறு பகுதி களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற் றன.  சேலம் அரசு இருபாலர் கலைக்கல் லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாணவர் சங்க மாநிலத் துணைத் தலைவர் சம்சீர் அகமது, மாவட்டத் தலை வர் அருண்குமார், மாவட்டக்குழு உறுப் பினர்கள் டார்வின், பிரியதர்ஷினி மற் றும் கிளைச் செயலாளர் கீர்த்திவாசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.  ஈரோடு இதேபோன்று, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் சத்தியமங் கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் ஏ.ராக்கிமுத்து, வட்டக் கிளைச் செயலாளர் என்.முத்துச்சாமி, மாவட்ட துணைத் தலைவர் செந்தில் நாதன், வட்டக்கிளை பொருளாளர் ஆர். முத்து உள்ளிட்ட திரளான அரசு ஊழி யர்கள் பங்கேற்றனர்.  தருமபுரி  இதேபோல், அரசு ஊழியர் சங்கத் தின் சார்பில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, வட்டக்குழுத் தலைவர் பன் னீர் செல்வம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், மாவட்ட நிர்வாகிகள் கே.புகழேந்தி, குமரன், ராஜ் கண்ணு உள்ளிட்ட திரளான அரசு ஊழி யர்கள் கலந்து கொண்டனர். 

கோவை

பொள்ளாச்சி திருவள்ளுவர் திட லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் ஒன்றிய, மணிப்பூர் மாநில பாஜக அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு சிபிஎம் பொள்ளாச்சி தாலுகா உறுப்பினர் மகாலிங்கம் தலைமை  வகித்தார். தாலுகா செயலாளர் அன்பர சன் கண்டன உரையாற்றினார். இதில் தபெதிக மனோகரன், தென்னை விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஸ்டா லின் பழனிச்சாமி, விவசாய தொழிலா ளர் சங்க பட்டீஸ்வரன், குடிநீர் வடி கால் வாரியத்தின்  சரவணன், போக்கு வரத்துக்கழக பொதுச்செயலாளர் பரம சிவம், மாதர் சங்க நிர்வாகி சித்ரா, வாலி பர் சங்க நிர்வாகி மணியாழன், தமு எகச நிர்வாகி மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ரவி நன்றி கூறினார். கோவை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் முன்பு பெண் வழக்கறிஞர் கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் மணி மேகலை தலைமை ஏற்றார். இதில் ஏரா ளமான பெண் வழக்கறிஞர்கள் பங்கேற் றனர். இதேபோன்று, சிவானந்த காலணி பவர்ஹவுஸ் முன்பு பியுசிஎல் அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் மணிப்பூர் மக்கள் ஏராள மானோர் பங்கேற்றனர். நாமக்கல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சார்பில், திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. கே.அரசு (எ) கோபி தலைமை வகித்தார். வாலிபர் சங்க நகரச் செயலா ளர் ஏ.சங்கர், சிபிஎம் முன்னாள் நகரச் செயலாளர் எஸ்.சீனிவாசன் உட்பட  பலர் கலந்து கொண்டனர். இதே போன்று பள்ளிபாளையம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மார்க் சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் எம்.அசோ கன், கே.குமார், அசன், முத்துக்குமார்,  முருகேசன் மற்றும் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லட்சுமணன், ஒன்றிய செயலா ளர் நவீன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.