districts

img

கனிமவள லாரிகளில் மாமூல் வசூல் பங்கீடுவதில் பிரச்சனை: ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட பாஜக நிர்வாகிகள்

உடுமலை, ஜூலை 18 - திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே பொள்ளாச்சி வட் டத்திற்கு உட்பட்ட கோமங்கலம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்  பிரசாத். இவர் பாஜகவின் ஓ.பி.சி.ஐடி  பிரிவு செயலாளர் என அனைவரிடம்  தெரிவித்துக் கொள்வார். எம் சேன்ட்,  ஜல்லி, ஜல்லி சிப்ஸ் கற்கள் போன் றவை லாரிகளில் கேரள மாநிலத் துக்கு செல்லும்பொழுது அதனை தடுத்து நிறுத்தி பிரச்சனை செய்வார். மேலும் அதிகாரிகளுக்கு புகார்கள் அளித்து நடவடிக்கை எடுக்க கோரி  பிரச்சனையில் ஈடுபடுவார். ஆனால்  கேரளாவுக்கு கனிம வளங்களை எடுத்து செல்லும் லாரி உரிமையாளர் களிடம் உள்ளூர் பாஜக நிர்வாகிகள்  பலர் மாதந்தோறும் பணம் பெற்று வந் துள்ளனர். அருணின் இந்த செயலால்  அவர்களுக்கு வருமான இழப்பு ஏற் பட்டுள்ளது. இதனால் அருண் மீது  கடும் கோபத்துடன் சில பாஜக நிர்வா கிகள் செயல்பட்டு வந்துள்ளனர்.  அருண் மற்றும் ஊராட்சி ஒன்றிய  கவுன்சிலராக உள்ள பாஜக நிர்வாகி  நாகமாணிக்கம் என்பவர் இடையே நடைபெற்ற தொலைபேசி உரை யாடல் ஆடியோ சமீபத்தில் வைரலா னது. அதில் நாகமாணிக்கம் எந் தெந்த பாஜக நிர்வாகிகளுக்கு மாமூல் பணம் செல்கிறது என அரு ணிடம் பேசியுள்ளார். அருண் செய்த  பிரச்சனையை மையமாக வைத்து மற்ற பாஜக நிர்வாகிகளும் பணம்  சம்பாதிக்க துவங்கி விட்டனர். இத னால் அருணுக்கும், இவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற் பட்டது.  அருணும், நாகமாணிக்கமும் பேசிய ஒரு ஆடியோவில் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் இருவரும் மாறி மாறித் திட்டிக் கொள்கின்றனர். இந்த பிரச்சனை நாளுக்கு நாள் முற்றி திங்களன்று நாகமாணிக்கம் வீடு அமைந்துள்ள பகுதிக்கு அருண் சென்றுள்ளார். அப்பொழுது ஆறு பேர் கொண்ட கும்பல் அருணை சரமாரியாக தாக் கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து உட னடியாக உடுமலை அரசு மருத்து வமனையில் அருண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அருண் உடு மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதில் நாகமாணிக்கம் உட்பட சிலர் தன்னை இரும்பு கம்பிகளை கொண்டு தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாகத் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு  செய்த காவல் துறையினர் நாகமா ணிக்கத்திடமும் விசாரித்தனர். அவர்  மடத்துக்குளம் வட்டத்தில் கட்சிக் கூட் டத்தில் கலந்து கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார். தான் அவரைத்  தாக்கவில்லை என்று தெரிவித்துள் ளார். ஆனால் அருண் தரப்பினர் நாக மாணிக்கம் அருணை தாக்கியது உண்மைதான். அப்பகுதியில் உள்ள  கண்காணிப்பு கேமராவில் பார்த்து  நாகமாணிக்கம் இந்த பிரச்சினையில்  ஈடுபட்டாரா என்பதை தெரிந்து  கொள்ள வேண்டும் என கூறியுள்ள னர். மேலும் தாக்கியவர்கள் அரு ணின் செல்போனையும் பறித்து சென் றதாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில் திங்களன்று இரவு  நாகமாணிக்கத்தின் ஆதரவாளர்கள் உடுமலை காவல் நிலையத்தை முற் றுகையிட்டு புகார் அளித்தனர். இதில், அருண் தரப்பினர் நாகமா ணிக்கம் வீட்டு ஜன்னல் கண்ணாடி கள் மீது கற்களை வீசி  தாக்குதல் நடத் தியதாகத் தெரிவித்துள்ளனர். இந்த  புகார் அடிப்படையில் அருண் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  கூறியுள்ளனர்.  உடுமலை காவல்துறையினர் இரு தரப்பின் புகாரையும் பெற்றுக்  கொண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின் றனர்.