உதகை, மார்ச் 3- உதகை மின்வாரியம் அலுவலகம் அருகே உள்ள தனியார் விடுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், பல் வேறு பொருட்கள் தீக்கிரையாகின. நீலகிரி மாவட்டம், உதகை பேருந்து நிலையம் பகுதியில் நகர மின்வாரியம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் அருகே பல தனி யார் விடுதிகள் உள்ளன. இந்நிலை யில், வியாழனன்று காலை 9 மணியள வில் திடீரென அங்குள்ள விடுதியின் இரண்டாம் மாடியில் உள்ள அறையில் தீ ஏற்பட்டது. தீ மளமளவென பரவி அருகிலிருந்த அறைகளுக்கும் பரவி யது. இதுகுறித்து தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளிக் கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் அருகிலேயே மின்மாற்றி உள்ளது. இதனால், உடனடியாக அப்பகுதியின் மின் இணைப்பை மின்வாரிய அலு வலர்கள் துண்டித்தனர். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும், உதவி தீயணைப்பு அலுவலர் ஏ.நாகராஜ் தலைமையில் தீயணைப் புத் துறையினர், சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து தீயணைப்புத் துறை யினர் கூறுகையில், கட்டிடத்தில் குறுக லான அறைகள் உள்ளன. மேலும், 3 எரிவாயு சிலிண்டர்கள் இருந்தன. சிலிண்டர்கள் உடனே அகற்றப்பட்ட தால், பெரும் அசம்பாவிதம் தவிர்க் கப்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம்’ என்ற னர். இதையடுத்து நகர கிராம நிர்வாக அலுவலர் ரவி கட்டிடத்தை ஆய்வு செய்து கூறுகையில், விடுதியில் கீழ் தளத்தில் மட்டும் மின்சாரம் இருந்தது. மேல் தளங்களில் மின்சாரம் துண்டிக் கப்பட்டிருந்தது. இதனால், அந்த அறை களுக்கு மின் இணைப்பு வழங்க லூப் போடப்பட்டதா? என்பது குறித்து விசா ரணை மேற்கொண்டு வருகிறோம் என் றார். காலை நேரத்தில் பள்ளி மற்றும் அலுவலகத்துக்கு செல்ல மக்கள் பேருந்து நிலையம் பகுதியில் திரண்டி ருந்த சூழலில் தீ விபத்து ஏற்பட்டதால் உதகையில் பெரும் பரபரப்பு ஏற் பட்டது.