ஈரோடு, செப். 29- ஈரோடு தலைமை தபால் நிலைய வளாகத்தில் அஞ்சல் ஊழியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தசரா பண்டிகை நெருங்கும் நிலையில், ஒன்றிய அரசு அஞ்சல் ஊழியர்களுக்கான போனஸ் அறிவிப்பை வெளி யிடவில்லை, உத்தரவும் வரவில்லை. எனவே உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி போனஸ் வழங்க வேண்டும். இதில் உச்சவரம்பை நீக்க வேண்டும். நிறுத்தப்பட்ட அக விலைப்படியை தாமதமின்றி வழங்க வேண்டும் என வலியு றுத்தி அஞ்சல் ஊழியர் கூட்டமைப்பு அறைகூவலின்படி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் கோட்ட செயலாளர் சத்ரு கண்ணன் தலைமை வகித்தார். பி3 கோட்ட செயலாளர் எஸ்.வெள்ளியங்கிரி, பி4 கோட்ட செயலாளர் தனசேகர், துணை கோட்டச் செய லாளர் செல்லமுத்து ஆகியோர் கோரிக்கை விளக்கவு ரையாற்றினர்.