districts

img

அரசின் உணவு திட்டங்களில் சிறுதானியங்கள் ஒன்றிய, மாநில அரசை வலியுறுத்தி தபால் அனுப்பும் இயக்கம்

தருமபுரி. டிச.2- சிறுதானியங்களை அரசின் உணவு திட்டங்களில் வழங்கக்கோரி தபால் கார்டு அனுப்பும் நிகழ்ச்சி இந்திய சிறுதானிய கூட்ட மைப்பு, உழைக்கும் பெண்கள்  ஒருங்கி ணைப்பு குழு சார்பில் தருமபுரி சந்திரா ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சங்கத்தின் நிர்வாகி  ரங்கநாயகி தலைமை வகித்தார். நவதானிய கூட்டமைப்பின் மாநில தலைவர் என்.சங்கர், தமிழக விவசாயிகள்சங்க தலைவர் எஸ்.ஏ. சின்னசாமி மற்றும் ஆனந்தன், கமலக்கண் ணன் உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் பெண் கள் பங்கேற்று பேசினர். இதில், தேசிய உணவு சட்டம் 2013ன் படி சிறுதானிய உற் பத்தி மற்றும் விவசாயிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந் தைகளுக்கு ஊட்டச்சத்தை மேம்படுத்த அங்கன்வாடி மையங்களில் சிறுதானியத் தில் மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுதானியங்களை உணவாக பயன்ப டுத்தினால் நோய்த் தொற்று ஏற்படாது. தர்ம புரியில் 80 சதவிகித சிறுதானிய உணவு பொருட்கள் உற்பத்தியாகிறது. எனவே, ஒன் றிய, மாநில அரசுகள் நியாய விலை கடை களில் சிறுதானியங்கள் கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். சிறுதானிய உணவு உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்த வேண்டும். அனைத்து சிறுதானிய பயிர் களுக்கு காப்பீடு வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  தர்மபுரி மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் தபால் கார்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பியும், இது  சம்மந்தமாக பொதுமக்களிடையே பிரச்சா ரம் செய்யப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

;