75 வாக்குகளுக்காக வாக்குச்சாவடி மையம்
உதகை, ஏப்.16- ஹெத்தை வனப்பகுதியில் உள்ள பெகும் பள்ளா முகாமில் 75 வாக்குகளுக்காக தற் போது புதிய வாக்குச்சாவடி மையம் அமைக் கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரு கிற 19 ஆம் தேதியன்று நடக்க உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும் உதகை, குன்னூர், கூட லூர், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானி சாகர் என 6 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கிய நீலகிரி நாடாளுமன்ற தொகுதி யில் 6,88,646 ஆண்கள் 7,39,524 பெண்கள், மாற்று பாலினத்தவர் 82 பேர் என்ன மொத்தம் 14,28,252 வாக்காளர்கள் உள்ளனர். 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய இந்த ஆண்டு தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ் வொரு வாக்கும் முக்கியத்துவம் பெற்றுள் ளது என்பதால் 75 வாக்குகள் மட்டும் கொண்ட ஹெத்தை வனப்பகுதியில் உள்ள ஒரு பெகும் பள்ளா முகாம் என்ற இடத்தில், தனியாக வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஹெத்தை மின் உற்பத்தி நிலைய ஊழியர்களுக்காக மின்வாரிய குடியிருப்பு முகாம் உள்ளது. இந்த மின்வாரிய ஊழியர் களின் குழந்தைகள் படிப்பதற்காக அங் குள்ள பெகும்பள்ளா முகாமில் நடுநிலைப் பள்ளி இருந்தது. இந்நிலையில் இரண்டு வரு டங்களுக்கு முன்னால், மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்ததால் அந்த பள்ளியை மூடப் பட்டு விட்டது. மிகவும் குறைந்த எண்ணிக்கை யில் இருந்த மாணவர்கள் மஞ்சூரில் உள்ள பள்ளிக்கு சென்று வருகின்றனர். மாணவர் சேர்க்கை இல்லாததால் மூடப் பட்ட பள்ளி அங்குள்ள 75 வாக்குகளுக்காக தற்போது வாக்குச்சாவடி மையமாக அமைக் கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிக்கு 2 வாக்குப்பதிவு எந்திரங்களும், 4 தேர்தல் அலு வலர்களும், பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார், கண்காணிப்பு அலுவலர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட உள்ளனர். இதேபோல் வனப்பகுதியில் குறைந்த எண்ணிக்கையில் வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடி மையமாக இருந் தாலும் அரசியல் கட்சிகள் இல்லாமல், தேர் தல் ஆணையமே போக்குவரத்து வசதிக்கு ஏற்பாடு செய்தால் 100 சதவீத வாக்குப்பதிவை எட்டலாம் என்று சமூக ஆர்வலர்கள் தெரி வித்துள்ளனர்.
தேயிலைக்கு உரிய விலை: ஆ.ராசா உறுதி
உதகை, ஏப்.16- பசுந்தேயிலைக்கு ரூ.35 விலை நிர்ணயம் செய்யப்படும் என நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.ராசா உறுதியளித்தார். இந்தியா கூட்டணி சார்பில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி யில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.இராசா செவ்வா யன்று காலை முதல் கூடலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நடுவட்டம், ஓவேலி, கூடலூர் நகரம் பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் ஆ.ராசாவுக்கு உற்சாக வரவேற்பளித்தனர். இதனைத்தொடர்ந்து அவர் வாக்கு சேகரித்து பேசுகையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் தமிழ்நாடு மக்களுக்கு ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டு களில் எண்ணற்ற நலத்திட்டங்களை செய்துள்ளார், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல் கூடலூருக்கு தலைமை மருத்துவமனை 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொண்டு வரப் பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு காலமாக குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் நாடு மோடியிடம் சிக்கி தவிக் கிறது. இந்த தேசத்தில் எத்தனையோ மொழிகள் மற்றும் மதங் கள் இருந்து வருகிறது. இவை அனைத்தையும் உள்ளடக் கிய ஜனநாயக நாடாக, மதச்சார்பற்ற நாடாக இருக்க கொண்டுவரப்பட்டதே அரசியல் அமைப்பு சட்டம். மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் இந்த அரசியல் அமைப்பு சட் டத்தை மாற்றுவேன் என மோடி கூறி வருகிறார். அனைத்தை யும் அழித்து சர்வதிகார ஆட்சியை கொண்டு வருவேன் என மோடி சொல்லாமல் சொல்லி வருகிறார். இந்தியாவில் பாஜக ஆட்சி அமைந்தால் இந்தியாவுக்கு இதுதான் கடைசி தேர்தல் என குறிப்பிட்ட அவர் இனி தேர்தல் என்பது இருக்காது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஒரு எரிவாயுவின் விலை 500 ரூபாய்க்கும், நீலகிரியில் உள்ள பசுந்தேயி லைக்கு 35 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்படும். எனவே, நீலகிரி தொகுதியில் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக் களித்து வெற்றி பெற வைக்க வேண்டும், என்றார். இப்பிரச் சாரத்தின்போது மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக், அமைச் சர் கா.ராமச்சந்திரன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரா விட மணி, மாவட்டத் துணைச்செயலாளர் ரவிக்குமார், பொறுப் பாளர் பல்லவி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை, ஏப்.16- பாஜகவின் கல்விக்கொள்கையை வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும்!
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வாக்காளர்களுக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை விடுத்துள்ள வேண்டுகோள் வருமாறு : பெரும் பகுதி மக்களுக்கானக் கல் வியை மறுக்கும் பா.ஜ.க. அரசின் கல்விக் கொள்கையை தேர்தல் வாக்குச் சீட்டின் வாயிலாக மக்கள் நிராகரிக்க வேண்டும். இந்தியாவின் பன்முகப் பண்பாட்டை உணர்ந்து, பண்பாட்டின் ஒரு கூறு கல்வி என்பதை அங்கீகரித்து, கல்வித் தொடர் பான அனைத்து முடிவுகளையும் மாநில அரசே எடுக்கும் வாய்ப்புகளை உருவாக் கும் வகையில் கல்வி மாநிலப் பட்டியலில் சேர்க்கப்படும் என்று “இந்தியா” கூட்டணி யில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் உள் ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தமது தேர் தல் அறிக்கையில் மக்களுக்கு வாக்க ளித்துள்ளன. இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி யில் சமமான கற்றல் வாய்ப்பு கிடைத் திட அரசுப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள் வலுப்படுத் தப்படும் என்று “இந்தியா” கூட்டணி தெரி வித்துள்ளது. குடியுரிமை முதல் குடிமக் கள் உணவு வரை அனைத்திலும் மதத்தின் பெயரால் பாகுபாட்டை உருவாக்கும் தீமையில் இருந்து இந்தியா காப்பாற்றப் பட ஒன்றிய அரசில் ஆட்சி மாற்றம் அவசி யம். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விழு மியங்களைக் காக்க வேண்டியக் கடமை உணர்வுடன் 2024இல் நடக்கும் நாடாளு மன்ற மக்களவைத் தேர்தலில் இந்திய மக்கள் பங்கெடுக்க வேண்டும். சமதர்ம இந்தியா மலர இந்தியா முழுவ தும் “இந்தியா கூட்டணிக்கு இந்திய மக் கள் வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டில், “இந்தியா” கூட்டணியில் “கை”, “கதிர் அரிவாள்”, “சுத்தியல் அரிவாள் நட்சத்தி ரம்”, “ஏணி”, “உதயசூரியன்”, “பானை”, “தீப்பெட்டி”, ஆகிய சின்னங்களில் போட் டியிடும் வேட்பாளர்களைத் மக்கள் தேர்ந் தெடுக்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக் கான மாநில மேடை கோருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
இந்தியா கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு
இந்தியா கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு சேலம், ஏப்.16- இந்தியா கூட்டணி சார்பில் சேலம் மாவட்ட தேர்தல் அலுவ லகம் ராமகிருஷ்ணா சாலையில் திறக்கப்பட்டது. இந்தியா கூட்டணி சார்பில் சேலம் நாடாளுமன்ற தொகுதி யில் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி போட்டியி டுகிறார். தேர்தல் வாக்குப்பதிவு தேதி அறிவிக்கப்பட்டது முதல் சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் கூட்டணி கட்சி தலை வர்களுடன் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், சேலம் மாவட்ட தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, திமுக மாவட் டச் செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, சிபிஎம் மாவட்டச் செய லாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.வெங்கடபதி, பொன்.ரமணி, மாவட்டக்குழு உறுப்பினர் பி.சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலை விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு
நாமக்கல், ஏப்.16- திருச்செங்கோடு அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்க ளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு - சேலம் சாலை யிலுள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பொறியி யல் படிக்கும் மாணவர் தரணிதரன் (18), வாழப்பாடி அருகே உள்ள பேரூர் செக்காரப்பட்டி அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த வர். அதே கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் மாண வர் சதீஷ் (18), கோகுல் ஆகிய மூவரும் கல்லூரியில் உணவு இடைவேளையின் போது ஒரே இருசக்கர வாகனத்தில் திருச் செங்கோடு சென்றுள்ளனர். இதன்பின் கல்லூரிக்கு திரும்பி வரும் வழியில் செம்மாம்பாளையம் அருகே இடதுபுறம் திரும் பிய வாகனத்தில் மோதாமல் தவிர்ப்பதற்காக இருசக்கர வாக னத்தை ஓட்டி வந்த கோகுல் வாகனத்தை திருப்பிய போது நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதினர். இதில் கோகுல் மற்றும் சதீஷ் ஆகியோர் சம்ப வத்தில் உயிரிழந்தனர். தரணிதரன் படுகாயங்களுடன் மயக்க மடைந்து கிடந்துள்ளார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தி னர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து, உடனடியாக திருச் செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயக்கமடைந்து நினைவு திரும்பாத நிலையில் உள்ள தர ணிதரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்து போன கோகுல் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து மல்லசமுத்திரம் காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது.
வங்கி அதிகாரிகளுடன் போலீசார் ஆலோசனை
வங்கி அதிகாரிகளுடன் போலீசார் ஆலோசனை நாமக்கல், ஏப்.16- வங்கி அதிகாரிகள், நகைக்கடை உரிமையாளர்கள், டாஸ் மாக் கண்காணிப்பளர்களுடன் காவல் துறையினர் ஆலோ சனை மேற்கொண்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் வங்கி அதி காரிகள், நகைக்கடை உரிமையாளர்கள், டாஸ்மாக் கண்கா ணிப்பளர்களுடன் துணை காவல் கண்காணிப்பாளர் இமயவ ரம்பன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் பேசகையில், மக்களவை தேர்தலை யொட்டி 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் போலீசார் தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருவார்கள். இந்த சூழ்நி லையை சாதகமாக பயன்படுத்தி சமூக விரோதிகள் சட்டவிரோ தமான செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இதனால் டாஸ் மாக் கண்காணிப்பாளர்கள் இரவு நேரத்தில் கூட டாஸ்மாக் கடைகள் உள்ள வளாகத்தில் தங்கிக்கொள்ள வேண்டும். வங் கிகள், ஏடிஎம் மையங்களை வங்கி நிர்வாகத்தினர் இரவு பகலாக தங்கள் பொறுப்பில் ஆட்களை வைத்து கண்கா ணிக்க வேண்டும். நகைக்கடை உரிமையாளர்கள் தங்கள் கடையில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை தங் கள் பாதுகாப்பில் பத்திரமாக பாதுகாப்பாக வைத்து, போலீசா ருக்கு உதவிட வேண்டும், என்றார். இக்கூட்டத்தில் குமாரபா ளையம் காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பட்டியலின பெண் மீது தாக்குதல்
பட்டியலின பெண் மீது தாக்குதல் சேலம், ஏப்.16- பட்டியலின பெண் என்பதாலும், வயது மூப்பை காரணம் காட்டியும் ஒன்றிய அரசுக்கு சொந்தமான செயில் ரீபேக்டரி நிறுவன அதிகாரிகள் பெண் ஊழியரை தாக்கி விரட்டிய டித்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள் ளது. சேலம் மாவட்டம், மாமாங்கம் பகுதியில் அமைந்துள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான செயில் ரீபேக்டரி நிறுவ னத்தில் உதவியாளராக கரூப்பூரைச் சேர்ந்த தமிழரசி (53) என் பவர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தமிழர சியை வயது மூப்பு காரணமாகவும், பட்டியலின பெண் என்ப தாலும் இனி வேலைக்கு வரக்கூடாது என்று அதிகாரிகள் திட்ட வட்டமாக கூறியுள்ளனர். இதனை ஏற்காமல் செவ்வாயன்று காலை மீண்டும் வேலைக்குச் சென்ற தமிழரசியை, உயர் அதி காரிகள் காவலாளிகள் மூலமாக நிறுவனத்திற்குள் நுழையவி டாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அவர்களிடம், தனக்கு ஏன் வேலை வழங்கவில்லை என்று தமிழரசி தட்டி கேட்டதால் அந்நிறுவன ஊழியர்கள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்து சாலையில் மயங்கி கிடந்த தமிழரசியை அப்பகுதி மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த சூரமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பட்டியலின பெண்ணின் உற வினர்கள் கூறுகையில், தமிழரசிக்கு வயது மூப்பு ஏற்பட்ட காரணத்தினால் இனி வேலைக்கு வரக்கூடாது. இளம் பெண் களை மட்டுமே இனி வேலைக்கு சேர்த்துக் கொள்வோம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். பட்டியலினத்தவர் என்பதால் வீட்டு வேலைக்கு அமர்த்த முடியாது என்றும் அதிகாரிகள் கூறி யதாக உறவினர்கள் தெரிவித்தனர். தனக்கு ஏன் வேலை வழங் கவில்லை என்று தட்டி கேட்ட தமிழரசியை காவலர்களை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், தலை முடியை பிடித்து இழுத்துச்சென்று வெளியே தள்ளியும், பூட்ஸ் காலால் எட்டி உதைத்தும் துன்புறுத்தியுள்ளனர். எனவே, காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தி அந்நிறு வன அதிகாரிகள் சித்ரா, மிஸ்ரா, முருகேசன் மற்றும் காவலா ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற னர்.
பாஜகவுடன் இணைந்தது தவறு என மருத்துவர் ஐயா உணர்வார்
நாமக்கல் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில், பாஜக மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், ஈரோடு மக்க ளவை தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் விஜயகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வரும் ஏப்.19 ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக உள் ளிட்ட கட்சியினர் தேர்தல் பணிகளை விறுவி றுப்பாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நி லையில், பாஜக கூட்டணி கட்சியினர் மந்த மான நிலையிலேயே தற்போது வரை தேர் தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்ற னர். நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை பாஜக வேட்பாளர் கே.பி. ராமலிங்கம் தொகுதி முழுக்க அறிமுகமான நபர் என்றாலும், பாஜக பலவீனமான கட்ட மைப்பு உள்ள தொகுதி என்பதாலும், போதிய அளவிலான கூட்டணி கட்சிகள் இல்லாததா லும் ஏனோ தானோ என்று பாஜகவினர் தேர் தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின் றனர். ஈரோடு தொகுதியை பொருத்தவரை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெ ரிய அளவிலான நட்சத்திர அரசியல்வா திகளோ, கட்சி பலமும் இல்லாததால், தொகு தியின் ஒரு சில பகுதிகளில் உள்ள கிளை அளவில் வட்டார அளவில் செயல்படும் பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் பிரச்சா ரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவினர் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதுகுறித்து ஈரோடு தொகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறுகையில், இந்த தேர்த லில் பாஜக கூட்டணியில் பாமக சேர்ந் ததை தற்போது வரை பெரும்பாலான தொண் டர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலை உள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் உற்சாக மாக பணியாற்றும் பாமகவினர், முன் எப்போ தும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறோம் என் கிற அறிவிப்பு வந்ததிலிருந்து சோர்வ டைந்து விட்டனர். கூட்டணி கட்சியாக இருக் கக்கூடிய பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆட்கள் இல்லாத நிலையில் அவர் களை நாங்கள் அழைத்துச் சென்று வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் நிலை ஏற்பட்டுள் ளது. களமும் எங்களுக்கு சாதகமாக இல்லா ததால், சமீப காலமாக நாங்கள் தேர்தல் பிரச் சாரத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டோம். கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களும் ஏன் நீங்கள் வரவில்லை என்றும் கேட்பதில்லை. அவர்களுக்கு ஏற்கனவே நன்கு தெரிந்தி ருக்கிறது. எப்படியும் இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி தமிழ கத்தில் வெற்றி பெறப்போவதில்லை என தெரிந்தே ஏனோ தானோ என்று தேர்தல் பிரச் சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட் டுமே முழுமையாக உள்ள நிலையில் பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணி கள் இருந்தாலும், அதுகுறித்து இதுவரை யிலும் கூட்டணி கட்சியிலிருந்து யாரும் பேச வில்லை. நாங்களும் எங்கள் வேலையை பார்த்து வருகிறோம். மேலும், பாஜக கூட்ட ணியில் பாமக இணைந்த நாள் முதலே உள் ளூர், மாவட்ட அளவில் கட்சிக்குள் நிறைய பிரச்சனைகள் உருவாகியுள்ளது. முறை யாக கூட்டணிக் கட்சியினரை அழைப்பதில்லை என பாமக நிர்வாகிகள் எங்களிடம் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வருகின்றனர். எது எப் படியோ இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந் தால் போதும் என்ற நிலைக்கு வந்துள் ளோம். தேர்தல் முடிவுக்கு பிறகு மருத்து வர் ஐயா மிகப்பெரிய தவறை செய்துவிட் டோம் என கண்டிப்பாக உணர்வார். வாட்ஸ் ஆப் குழுவில் பாமக நிர்வாகிகள், கட்சி நிர்வா கிகள் மத்தியில் இதுகுறித்து தங்களுடைய மனக்குமுறல்களை வெளிப்படுத்தி வருகின் றனர். இவ்வாறு தனது ஆதங்கத்தை பொழிந் துள்ளார்.
பயணிகளை அச்சுறுத்திய மலைப்பாம்பு
பயணிகளை அச்சுறுத்திய மலைப்பாம்பு சேலம், ஏப்.16- ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காட்டில் தற் பொழுது கோடை காலம் என்பதால் சுற்றுலாப் பயணிக ளின் வருகை அதிகரித்துள்ளது. வரலாறு காணாத அளவிற்கு தற்போது ஏற்காடு வனப்பகுதிகளில் கடுமையான வெயி லின் தாக்கம் அதிகம் உள்ளதால், வனவிலங்குகள் ஆங் காங்கே குடிநீருக்காக குடியிருப்பு பகுதிகளுக்குள் வெளி யேறி வருகிறது. பாலூட்டி வகைகளை சார்ந்த காட்டு மாடுகள், மான், வரையாடு உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதிக ளுக்கு வெளியே இறை தேடி மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. இந்நிலையில், ஏற்காடு மலைப் பாதை 18 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகில் மிகப்பெ ரிய அளவில் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு சாலை யில் ஊர்ந்து சென்றது. இதனை அவ்வழியே சென்ற சுற்று லாப் பயணிகள் அச்சத்துடன் பார்த்து கடந்து சென்றனர்.
பாஜக தோல்வியை தடுக்க முடியாது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு
பாஜக தோல்வியை தடுக்க முடியாது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு திருப்பூர், ஏப். 16 - நரேந்திர மோடி தமிழகத்திற்கு 90 முறை வந்தாலும் நாடா ளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவின் தோல்வியை தடுக்க முடியாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறி னார். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி யில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுப்பராயன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ திங்களன்று இரவு திருப்பூர் காந்தி நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, திராவிட இயக்கத்தின் திருப்புமுனையாக அமைந்தது திருப்பூர். சுப்பராயன் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். தமிழ் நாட்டை பாதுகாக்கவும், இந்தியாவை பாதுகாக்கவும் இந்தியா கூட்டணி ஆட்சியில் அமர வேண்டும். இந்துத்துவா மற்றும் சனாதன கூட்டத்திற்கு முடிவு கட்ட மக்கள் முடிவு செய்துவிட்டனர். இந்த வெற்றி காஷ்மீர் வரை எதிரொலிக்கும். பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு 9 முறை வந்துவிட்டார். அவர் 9 முறையல்ல, 90 முறை வந்தாலும் பாரதிய ஜனதா தோல்வி யடைவதை யாராலும் தடுக்க முடியாது. தமிழ் மீது பற்று கொண்டுள்ளதாக நடித்து வருகிறார். இந்தியில் திருக்கு றளை எழுதி அதனை மேடையில் வாசித்து வருகிறார். உண்மையில் தமிழ் மீது பற்று இருந்தால், ஹிந்தி மொழிக்கு பதிலாக தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அவர் அறிவிக்க வேண்டும். மாறாக தற்போது தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் வந்து நாடகம் ஆடி வரு கிறார். தமிழர்களை ஏமாற்ற முடியாது. தமிழர், வளம், இனம், பண்பாடு பாதுகாக்க இந்திய கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றார்.
பட்டமளிப்பு விழா
உதகை, ஏப்.16- நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை மற்றும் முது கலை பிரிவில் தமிழ், ஆங்கி லம், உள்ளிட்ட பாடப்பிரிவு கள் உள்ளன. இங்கு சுமார் 4,000 மாணவ, மாணவிக ளும், 200 பேராசிரியர்கள் உள்ளனர். இங்கு நீலகிரி மாவட்டம் மட்டும் இல்லா மல் சமவெளி பகுதியில் உள்ள பல்வேறு மாவட்டங்க ளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் 2021-22 ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற பெற்ற மாணவ, மாண விகளுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற் றது. இந்நிகழ்ச்சியில் விலங் கியல் துறை இணை பேராசி ரியர் சனில் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ராமலட் சுமி தலைமை வகித்தார். இந்த பட்டமளிப்பு விழாவில் 952 மாணவ, மாணவிக ளுக்கு பட்டங்கள் வழங்கப் பட்டது.