பொள்ளாச்சி, ஆக. 20- கோவை மாவட்டம், பொள்ளாச்சி தேசிய நெடுஞ் சாலையில் உள்ள வடக்கி பாளையம் பிரிவில் தனியார் மதுபான கடை (பார்) திறக்க அனுமதிக்க கூடாது என அனைத்து கட்சி சார்பில் செவ்வாயன்று பொது மக்களி டம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.ஆர்.பழனிச்சாமி, கே.எஸ்.கனக ராஜ், தாலுகாச் செயலாளர் எம்.அன்பரசன், தாலுகா குழு உறுப்பினர்கள் கே. மகாலிங்கம், வி.பாலகுருசாமி, தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் இரா. மனோகரன், பா.பாலமுருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலாளர் ச.பிரபு, ம.ஜ.க அன்சார், மதிமுக வழக்கறிஞர் ரவிச்சந்திரன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.