districts

பண மோசடி: நகராட்சி கவுன்சிலரை அழைத்து சென்ற போலீசார்

நாமக்கல், நவ.14- கோடிகணக்கில் பண மோசடி புகாரில் ராசிபுரம் 12 ஆவது வார்டு பெண் கவுன்சிலர் சசிரேகா சதீஷ், நகராட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்த போது, குற்றப்பிரிவு போலீசார்  அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நக ராட்சியின் 12 ஆவது வார்டு சுயேட்சை கவுன்சிலராக இருப்பவர் சசிரேகா.  இவருடைய கணவர் சதீஷ். இவர் மோகனூர் திமுக பேரூர் செயலாளர் செல்லவேல் (எ) செல்லப்பன்னிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக தெரிவித்துள்ளார். மேலும், குறைந்த வட்டிக்கு அரசியல்வாதிகளிடம் பல  கோடி பணம் பெற்று தருவதாகவும், ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்து தொழில் செய்வதாகவும் கூறியுள் ளார். இப்படி நம்ப வைத்து சுமார் இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும், கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பணத்தை வீட் டில் வந்து  பெற்று மோசடி செய்தாக  நாமக்கல் மாவட்ட குற்ற பிரிவு அலு வலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.  புகாரின் அடிப்படையில் 12 ஆவது வார்டு கவுன்சிலர் சசிரேகா மற்றும் அவருடைய கணவர் சதீஷ்க்கு மாவட்ட குற்றப்பிரிவிலிருந்து பல முறை சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இருவரும் ஆஜராகாமல், கடந்த மூன்று மாதங்களாக கணவன்,  மனைவி இருவரும் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.   இந்நிலையில், செவ்வாயன்று நகர்மன்ற கூட்டத்திற்கு சசிரேகா கையெழுத்து போட வருவதை அறிந்த குற்றப்பிரிவு போலீசார், நக ராட்சியில் நடைபெற்றுக் கொண்டி ருந்த நகர மன்ற கூட்டத்திற்குள் புகுந்து 12ஆவது  வார்டு சுயேச்சை கவுன்சிலர் சசிரேகாவை விசார ணைக்கு அழைத்துச் சென்றுள்னர். தமிழக முழுவதும் முக்கிய அரசியல் வாதிகளிடம் பல கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாகவும், வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக வும், புகார் வந்ததைத் தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கி யுள்ளதாக கூறுப்படுகிறது. இந்நி லையில், கணவர் சதீஷ் தலைமறை வாக உள்ளதால் அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட குற்ற பிரிவு போலீசார் தேடி வருகின்ற னர்.