districts

img

விஷவாயுக் கசிவு:  அதிகாரிகள்  12 பேர் கைது

விசாகப்பட்டினம், ஜூலை 8- ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே எல்.ஜி. ரசாயன தொழிற்சாலை யில் கடந்த மே 7-ந் தேதி அதிகாலை வி‌ஷ வாயு கசிவு ஏற்பட்டது. இதில் தொழிற்சாலையை சுற்றியுள்ள 5 கி.மீ கிராமங்களுக்கு வி‌ஷ வாயு பரவியது. இதனால் 12 பேர் உயிரிழந்தனர். மற்றும் 585 பேர் நோய்வாய்ப்பட்டனர்.  எல்.ஜி. நிறுவனத்தில் இருந்த  பல குறைபாடுகள் மற்றும் மோசமான பாதுகாப்பு நெறிமுறைகள் நிர்வா கத்தின் அலட்சியம் மற்றும் ஆலையில் அவசரகால மீட்பு நடைமுறைகளின் மொத்த கோளாறே இந்த விபத்துக்கு காரணம் என அம்மாநில அரசின் உயர் மட்டக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள் ளது. இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக 2 மாதங்களுக்குப் பிறகு, எல்ஜி நிறுவன தலைமை நிர்வாக அதி காரி, இரண்டு இயக்குநர்கள் உட்பட  12 பேரை விசாகப்பட்டினம் காவல்துறை யினர் கைது செய்தனர். இதில் சிலர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.