districts

img

குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி மறியல்

மேட்டுபாளையம், ஜூலை 10- மேட்டுப்பாளையத்தில் சேதமடைந் துள்ள சாலையை சீர்செய்ய வலியு றுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம்  நகராட்சியில் 33 வார்டுகள் உள் ளன. நகரின் மையப் பகுதியான 6 ஆவது வார்டு எஸ்.எம் நகர் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக தோண்டப் பட்ட சாலை கடுமையாக சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சாலை உடைந்து ஒரு மாதம் காலத் திற்கும் மேலாகியும் அதனை சீர் செய்ய நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இது குறித்து பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்தி டம் கோரிக்கை வைத்தும எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. இத னால், சேதமடைந்த சாலையால் வீடு களில் புழுதி பறந்து சுகாதாரமற்ற சூழ லும் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகி றது. இதனையடுத்து, இப்பகுதி  மக்கள்  பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து போராட்டத்தில் ஈடு பட்ட மக்கள் கூறுகையில், சாலை சேதம டைந்து நீர் தேங்கி குண்டும் குழியுமாக இருப்பதால் பள்ளி குழந்தைகள் செல்வ தற்கு உரிய பாதை இல்லை. இவ்வழி யேதான் வனபத்ரகாளியம்மன் கோவில், நகராட்சி மின் மயானம் உள்ளிட்டவற் றுக்கு செல்ல வேண்டும். இந்த பழுத டைந்த சாலையைத்தான்  பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மேட்டுப்பாளையம் நக ராட்சி அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் ஓரிரு நாட்களில் சாலை சீரமைப்பு பணிகள் துவக்கப்படும் என் றும், இன்னும் இருபது நாட்களில் சாலை  முழுவதுமாக அமைக்கப்படும் என உறு தியளித்தனர். இதனையேற்று, மறிய லில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்ற னர்.