districts

img

இடுவாய்: டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்

திருப்பூர், செப்.28- இடுவாயில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மாவட்ட வரு வாய் அலுவலரிடம் (டிஆர்ஓ) மனு அளித்தனர்.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது, திருப்பூர்  ஒன்றியம் இடுவாய் ஊராட்சியில் அரசு மதுபானக்கடை மற்றும் அதோடு இணைந்து செயல்படும் பார் செயல் படுகிறது. இவைகளால் அந்தப் பகுதி யில் வசித்து வரும் பொது மக்க ளுக்கும், பள்ளிகளுக்குச் செல்லும்  குழந்தைகளுக்கும், மளிகை கடை களுக்கு வரும் பெண்களுக்கும் மிகப்பெரிய அளவில் இடையூறாக உள்ளது. அதிகாலை முதலே செயல் பட்டு வரும் இந்த மதுபான கடையில் மது அருந்துவோர் சாலையின் இரு புறங்களிலும் அமர்ந்து கொண்டு வழி யில் செல்லும் பெண்களிடமும், குழந் தைகளிடமும் கேலியும் கிண்டலும் செய்கின்றனர். இதுகுறித்து கேள்வி எழுப்புவோரிடம் தகறாறு செய்வது தொடர்கிறது. எனவே இந்த பகுதி யில் செயல்பட்டு வரும் மதுபான கடையை அகற்ற கோரி இடுவாய் ஊராட்சியில் இதுவரை நடைபெற் றுள்ள ஆறு கிராம சபை கூட்டங்களி லும் ஏக மனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானங் களின் நகல்களோடு இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் தங்களிடம் கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மேற்கோள் காட்டி  அரசு மதுபான கடையை அகற்றச்  சொல்லி மனு அளித்துள்ளார். ஆனால், இதுவரை அந்த அரசு மதுபான கடையை அகற்ற எந்த விதமான நடவ டிக்கையும் அரசு தரப்பில் இருந்து எடுக்கவில்லை. எனவே தொடர்ந்து பாதிப்புக்கு  உள்ளாகி வரும் பொதுமக்களும் பெண்களும் குழந்தைகளும் சிரமத் தில் இருந்து பாதுகாப்பதற்காக இந்த  கடையை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், இனிமேலும் தொடர்ந்து மதுபான கடையை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பொதுமக்களை திரட்டி அரசு மதுபான கடையை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும் எனவும், மேற் கண்ட கோரிக்கையின் மீது உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளனர்.  முன்னதாக, இந்த மனுவினை மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செய லாளர் மூர்த்தி மற்றும் கிளை செயலா ளர்கள் கே.கருப்புசாமி அப.ரத்தின சாமி, சுந்தரம் முன்னாள் கிளை செய லாளர்கள் கே.ஈஸ்வரன் குமரவேல் பங்கேற்றனர். மனுவின் நகலை டாஸ் மாக் மேலாளரிடம் அளித்தனர்.