districts

img

அகவிலைப்படி நிலுவையை ரொக்கமாக வழங்கிடுக ஓய்வூதியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, செப்.20- அகவிலைப்படி நிலுவையை ரொக்கமாக வழங்க வேண்டும்  உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங் கத்தினர் தமிழகம் முழுவதும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். 2022 ஜனவரி முதல் ஜூன் மாதம்  வரை வழங்க வேண்டிய 3 விழுக் காடு அகவிலைப்படி நிலுவை தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு சந்தா தொகை உயர்வை கைவிட வேண்டும். 70 வயதை கடந்தவர்களுக்கு கூடுதலாக 10  விழுக்காடு ஓய்வூதியம் தேர்தல் வாக்குறுதிப்படி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூ தியம் ரூ.7850 வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் பயண  கட்டண சலுகையினை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும். பணி நிறைவு நாளன்று  தற்காலிக பணி நீக்கம் செய்யும்  நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் இந்த ஆர்ப்பாட்டங்களில் முன்வைக்கப்பட்டது.  ஈரோடு வட்டாட்சியர் அலுவலக  வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.சங்கரன் தலைமை வகித்தார். மாவட்ட இணை செய லாளர் என்.மணிபாரதி கோரிக்கை களை விளக்கி பேசினார். போக்கு வரத்து கழக ஓய்வூதியர் சங்க  மாவட்ட செயலாளர் எஸ்.ஜெய ராமன் வாழ்த்தி பேசினார். மேனாள் மாநிலத் தலைவர் கே.ராஜ்குமார் நிறைவுரையாற்றினார். மாவட்ட  பொருளாளர் எஸ்.பாலசுப்ர மணியன் நன்றி கூறினார்.

சேலம்

இதே கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தினர் சேலம் நாட்டாண்மை கழக  கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட  தலைவர் ரா.ஜோதி மதன் தலைமை  வகித்தார். இதில், சங்கத்தின் மாநில  துணைத்தலைவர் இரா.சுப்பிர மணியம், மத்திய, மாநில பொதுத் துறை ஓய்வூதியர் கூட்டு நடவ டிக்கை குழு மாவட்ட செயலாளர் டி.நேதாஜி சுபாஷ் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டனர்.

உதகை 

நீலகிரி மாவட்டம், ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர்  சங்க மாவட்ட தலைவர் சஞ்சீவி ராஜ் தலைமை தாங்கினார்.  மாவட்ட செயலாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் வர்க்கிஸ், வில்லியம், வீரையா, ராமன்குட்டி,  குமார் உள்ளிட்டோர் உரையாற் றினர். 

தருமபுரி

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பழனிச்சாமி  தலைமை வகித்தார். மாவட்ட  செயலாளர் எம்.பெருமாள், பொரு ளாளர்  அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் அமைப்பின் மாநில இணைச்செயலாளர் கே. குப்புசாமி, பிஎஸ்என்எல் ஓய்வூ தியர் அமைப்பின் மாவட்ட தலைவர் கோபாலன், ஒருங்கி ணைப்பு குழு தலைவர் பாஸ்கரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

கோவை

இதேபோன்று கோவை சிவா னந்தகாலனி, பவர்ஹவுஸ் முன்பு  நடைபெற்ற தர்ணா போரட்டத் திற்கு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மதன் தலைமை  தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர்  அரங்கநாதன் துவக்க வுரையாற்றினார். பொருளாளர்  குடியரசு மற்றும் மண்டல செய லாளர் கருணாநிதி ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர். இதில் ஓய்வூதியர் சங்கத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பங் கேற்றனர்.

 

;