districts

img

பீளமேடு, தண்ணீர் பந்தல் பகுதியில் சுரங்கப்பாதை பி.ஆர்.நடராஜன் எம்.பியிடம் ரயில்வே அதிகாரிகள் உறுதி

 கோவை, நவ.30–  கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கோரிக்கையேற்று பீளமேடு மற்றும் தண்ணீர் பந்தல் பகுதிக ளில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்தனர்.  கோவை தண்ணீர் பந்தல் மற்றும் பீளமேடு  பகுதிகளில் ரயில்வே பாதையை ஒட்டி  சுரங்கப்பாதை அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் பல நாள் கோரிக் கையாக இருந்து வந்தது.

இதையடுத்து தண்ணீர் பந்தலில் வாகனங்கள் செல்வ தற்காக பாலம் கட்டும் பணிகள் கடந்த இரு  வருடங்களுக்கு முன்பு துவங்கியது. இப்பணி யின் காரணமாக அச்சாலை அடைக்கப்பட்டு, சுமார் இரண்டு கிலோ மீட்டர் சுற்றி கோவை  மருத்துவக் கல்லூரியின் வழியே பொது மக்கள் சென்று வருகின்றனர். இதனால் தினசரி பணிக்குச் செல்வோர், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் உள்ளிட்டோர் வெகு வாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இதேபோல், பீளமேடு பகுதியில் தண்ணீர் பந்தல் - பீளமேட்டை இணைப் பதற்கான பாலம் கட்டப்பட்டு சமீபத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப் பட்டது.

இருப்பினும் பாலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ரயில்வே பாதையைக் கடந்து செல்ல பெரி தும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனைய டுத்து தண்ணீர் பந்தல் மற்றும் பீளமேடு பகுதிகளில் ரயில்வே பாதையை ஒட்டி சுரங் கப்பாதை அமைக்கப்பட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினரான பி.ஆர்.நடராஜனிடம் கோரிக்கை வைத்த னர். இதனையடுத்து அப்பகுதி மக்களின் கோரிக்கையின் நியாயம் உணர்ந்து பி.ஆர்.நடராஜன் எம்.பி., ரயில்வே அதிகாரி களை சந்தித்து சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக வலியுறுத்தினார்.

கடந்த நான்கு  நாட்களுக்கு முன்பு சேலத்தில் நடைபெற்ற தெற்கு ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தி லும் பங்கேற்று இத்திட்டத்திற்கான அவசி யம் குறித்து வலியுறுத்தினார். அப்போது, ரயில்வே அதிகாரிகள் இவ்விரு இடங்களை யும் திங்களன்று ஆய்வு செய்ய வருவதாக தெரிவித்திருந்தனர்.  இதன்தொடர்ச்சியாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சோமசுந்தரம், ரயில்வே துறை கோட்டப் பொறியாளர் திரு மால், ரயில்வே கோட்ட கட்டுமானப் பொறியா ளர் ராஜகோபால் உள்ளிட்ட ரயில்வேதுறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே ஆலோச னைக் குழு உறுப்பினர் யு.கே.சிவஞா னம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்த னர்.

இதன்பின், பி.ஆர்.நடராஜன் எம்.பி.,யிடம் அதிகாரிகள் கூறுகையில்,  தண்ணீர்  பந்தல் மற்றும் பீளமேடு ஆகிய பகுதிகளில் சுரங்கப் பாதைகள் அமைக்கப்படும் என்றும்,  இது பாதசாரிகள் மட்டும் உபயோகிக்கும் சுரங்கப் பாதையாகவோ அல்லது சிறிய  வாகனங்கள் செல்வதற்கான சுரங்கப் பாதை யாகவே அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித் தனர்.