districts

img

யானை தாக்கி மாணவன் உயிரிழப்பு: நிவாரணத்தொகை வழங்கல்

பொள்ளாச்சி, ஜூன் 2- வால்பாறையில் யானை தாக்கி உயிரிழந்த கல்லூரி மாணவர் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் ரூ.50 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.  கோவை மாவட்டம், பொள் ளாச்சி வனக்கோட்டம், மானாம் பள்ளி வனச்சரகம் தனியார் தேயி லைத் தோட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மூத்தமகன் முகேஷ் (18), கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், முகேஷ் சனியன்று மாலை புதுக் காடு எஸ்டேட்டிலிருந்து சோலை யார் அணை செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது புதுக்காடு எஸ்டேட் தேயிலைத் தோட்டப் பகுதியிலிருந்த வந்த காட்டுயானை முகேஷை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, அவர் உடல் வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைக்கப்பட் டது. இதன்பின் அவரின் உடலை காவல் துறையினர் உறவினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, துணை இயக்குநரின் உத்தர வின்படி, உடனடி நிவரணத்தொ கையாக ரூ.50 ஆயிரத்தை முகே ஷின் தந்தை சுரேஷிடம் வழங்கப் பட்டது. மேலும், இச்சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், மானாம்பள்ளி வனச்சரக களப்ப ணியாளர்கள் மற்றும் மனித வன  உயிரின மோதல் தடுப்புக்குழுவினர் கள் கூடுதலாக பணியமர்த்தப்பட் டுள்ளனர். வன விலங்குகளின் நட மாட்டம் கண்காணிக்கப்பட்டு, பொது மக்களை காக்க நடவடிக்கை எடுத்து  வருகிறது, என மானாம்பள்ளி வனச் சரக அலுவலர் ஆ.மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

;