districts

img

நோய்களை தடுக்கும் வகையில் ரோந்து பணிகளை தீவிரப் படுத்த கவுன்சிலர்கள் கோரிக்கை

திருப்பூர், நவ.30- தொற்று நோய்களைத் தடுக்கும் வகையில் நகர் நல அலுவலர் ரோந்து  பணிகளைத் தீவிரப் படுத்த வேண்டும் என கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்தில்  கோரிக்கை வைத்தனர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகத் தில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வியாழனன்று மாநகராட்சி மேயர் நா. தினேஷ்குமார் தலைமையில் நடை பெற்றது. இதில், மாமன்ற உறுப்பி னர்கள் அந்தந்த வார்டு பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து மாந கராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் கவனத்திற்கு கொண்டு சென்றனர். குறிப்பாக அனைத்து பகுதிகளிலும் சோடியம் மின் விளக்குகள் எரியாமல் இருப்பதாகவும்,  பழுதடைந்த சோடி யம் மின் வழக்கங்களை மாற்றி தர வேண்டும் எனவும் விளக்குகளை பராம ரிக்கும் பணியாளர்கள் பற்றாக்குறை யாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.   இதனைத் தொடர்ந்து மாநகரின் பல் வேறு பகுதிகளில் மழை பெய்து வரு வதன் காரணமாக ஆங்காங்கே மழை  நீர் தேங்கி டெங்கு , மலேரியா உள்ளிட்ட  காய்ச்சல்கள் பரவக்கூடிய சூழலில் மாந கர நகர் நல அலுவலர் கௌரி சரவணன்  ரோந்து மேற்கொண்டு அலுவலர்க ளுக்கு ஆலோசனைகளை வழங்குவ தில்லை என மாமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். மாநகர நகர அலுவலர் பணி தற்போ துள்ள மழைச் சூழலில் திருப்திகரமாக இல்லை என மாநகராட்சி மேயரும் அதிர்ப்தி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாநகர நகர் நல அலுவ லர் தினந்தோறும் ரோந்து பணி மேற் கொண்டு மாநகராட்சி ஆணையாளரி டம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்  என மாநகராட்சி மேயர் உத்தரவிட்டார். இதில், மாநகராட்சி ஆணையாளர்,  துணை மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.