திருப்பூர், டிச.31- திருப்பூரில் செயல்பட்டு வரும் முற்போக்கு கலை இலக் கிய பண்பாட்டு அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து “நொய்யல் பண்பாட்டு அமைப்பு” என்ற புதிய இயக்கத்தை தொடங்கி யுள்ளனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங் கத்தின் முன்னெடுப்பில் வியாழக்கிழமை காலேஜ் ரோடு டிப் டாப் ஹோட்டல் அரங்கில் திருப்பூர் நகரில் பண்பாட்டு தளத்தில் இயங்கி வரும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகி கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மங்கலம் முன் னாள் ஊராட்சி மன்ற தலைவர் வே.முத்துராமலிங்கம் தலை மையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டு ஆக்கப்பூர்வமான பல ஆலோசனைகளை தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரது ஆலோ சனைகளின்படி திருப்பூரில் தமிழ் பண்பாடு மற்றும் கலை இலக்கிய நிகழ்வுகளை முன்னெடுக்கும் வகையில் “நொய் யல் பண்பாட்டு அமைப்பு” என்கின்ற அமைப்பு உருவாக்கப் பட்டது. இவ்வமைப்பின் முதல் நிகழ்வாக வரும் ஜனவரி 16 (ஞாயிறன்று) காலை 8 மணிக்கு திருப்பூர் மாநகராட்சியின் முன்பாக கலை நிகழ்ச்சிகளோடு பொதுமக்களுக்கு பொங் கல் வழங்கி மக்கள் விழாவை கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அத்துடன் வரும் ஆண்டுகளில் ஒத்த கருத்துடைய அமைப்புகளை இணைத்துக் கொண்டு தொடர்ச்சியாக பொங்கல் திருவிழாவை நொய்யல் நதிக் கரையில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டி களோடு சிறப்பாக நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் நொய்யல் பண்பாட்டு அமைப்பிற்கு கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவர் - அரிமா.மு.ஜீவானந்தம் (வெற்றித்தமிழர் பேரவை) துணைத் தலைவர்கள் - வே. முத்துராமலிங்கம் (மங்கலம் ஊராட்சி மன்ற மு.தலைவர்), மோகன் கார்த்திக் (கிட்ஸ் கிளப் பள்ளி சேர்மன்), பி.ஆர்.நடராசன் (தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்), சி.சுப்பிரமணியம் (திருப்பூர் மக்கள் மாமன் றம்), சா.பழனிசாமி (முன்னாள் மாமன்ற உறுப்பினர்). செய லாளர்- ஆர்.ஈஸ்வரன் (த.மு.எ.க.ச), துணைச் செயலா ளர்கள் - பாரதி சுப்பராயன், ஜி.நடராஜன் (திருப்பூர் செய்தி கள்), டிப்டாப் கிருஷ்ணமூர்த்தி, யோகி செந்தில் (தமிழ்ப் பண்பாட்டு மையம்), சுசீலா (பவளக்கொடி ஒயிலாட்டக் குழு), பொருளாளர் - மு.திருப்பதி (த.மு.எ.க.ச) செயற்குழு உறுப்பினர்கள் கு.ந.தங்கராசு (தாய்த்தமிழ் மழலையர் மற் றும் தொடக்கப்பள்ளி), ஆசிரியர் பாலு, எஸ்.சுந்தரபாண்டி யன் (நாளைய திருப்பூர் மக்கள் அமைப்பு), பாண்டியராஜன் (தமிழ்ச்சோலை) எஸ்.ஏ.காதர் (தமிழ்நாடு கலை இலக்கி யப் பெருமன்றம்), ஆர்.குமார் (த.மு.எ.க.ச), ஜி.கே.பெரிய சாமி, ஆர்.மைதிலி (நதிகள் அமைப்பு), கோவை சதா சிவம் (சூழலியல் செயற்பாட்டாளர்) ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர். பொங்கல் விழாவில் கும்மி ஆட்டம், பறை இசை நிகழ்ச்சி கள் நடத்துவது, விழாவிற்கான விளம்பரம் உள்ளிட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்வது என்றும் தீர்மானிக்கப்பட் டது.