districts

img

பரம்பிக்குளம் அணையின் ஷட்டர் உடைந்தது கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

கோவை, செப்.21- பொள்ளாச்சி அருகே உள்ள பரம் பிக்குளம் அணையின் ஒரு ஷட்டர் கழன்று விழுந்ததால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண் டும் என பொதுப்பணித்துறை அதிகா ரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பரம்பிக்குளம் அணை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெறப்படும் மழைநீர் சோலையார் அணைக்கு வந்து, அங்கிருந்து உபரிநீராக பரம் பிக்குளம் அணை வந்து சேர்கிறது. மொத்தம் 71 கன அடி  நீர்த்தேக்க  கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையிலிருந்து உபரிநீர் வெளி யேற்றம் செய்யும்பொழுது, அந்த நீர் கேரள மாநிலம், சாலக்குடி வழி யாக சென்று கடலில் கலக்கிறது. இத னிடையே செவ்வாயன்று இரவு 10  மணியளவில் அணையில் உள்ள  மூன்று ஷட்டர்களில் நடுவில் இருந்த ஒரு ஷட்டர் கழன்று விழுந்து, வெள் ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள் ளது.

இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத் திற்கு பாலக்காடு மாவட்ட ஆட்சியர் முனராய் ஜோஷி மற்றும் தமிழக, கேரளா பொதுப்பணித்துறை அதி காரிகள் நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டு, அணையிலிருந்து வெளி யேறி வரும் நீரை கட்டுப்படுத்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்ற னர். மேலும், அணையிலிருந்து வெளியேறும் நீரால் வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகா ரிகள் அறிவுறுத்தி உள்ளனர். முன்னதாக, அணையில் தமிழக  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுரு கன், மின்சாரத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட னர். இதில், நீர்வளத்துறை அரசு முதன்மை செயலாளர் சந்தீப் சக் சேனா, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீ ரன், கேரளா, நென்மாறா சட்டமன்ற உறுப்பினர் கே.பாபு, நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முத்துசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

;