districts

img

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

மேட்டுப்பாளையம், டிச.6-  மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக  12 வயது சிறுமிக்கு  பிளவுபட்ட கணையத்தில் அறுவை சிகிச்சை வெற்றி கரமாக மேற்கொண்டு மருத்துவர் கள் சாதித்துள்ளனர். கோவை மாவட்டம், அன்னூர் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார், குண லட்சுமி தம்பதியினரின் மகள்  அனுஸ்ரீ (12). பள்ளியில் 6  ஆம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்த நிலையில் சிறுமி அனுஸ்ரீ நீண்ட நாட்களாக அடிக்கடி வயிற்று வலி ,வாந்தி, பசி யின்மை, காய்ச்சல், வயிற்றுப் போக்கு ஆகிய நோய்களால் அவ திப்பட்டு வந்தார். பல்வேறு மருத் துவமனைகளுக்கு சென்று மருத் துவ சிகிச்சை பெற்று வந்த போதும் குணமாகவில்லை எனத் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆனந்தகுமார் தனது மகளை மருத்துவ  சிகிச்சைக்காக மேட் டுப்பாளையம் அரசு மருத்துவ மனைக்கு கூட்டி சென்றுள்ளார். அப்போது, முதல் கட்டமாக சிறுமிக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ததில் கணையத்தில் 2 குழாய்கள் இருப்பதும், அதில் பிரதான குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதும்  தெரிய வந்தது. பிளவுபட்ட கணையத் தில் உள்ள முக்கிய குழாயில் திர வம் வடிய முடியாமல் கணையத் தின் தலைப்பகுதி பழுதடைந்து பிரதான குழாயில் கற்கள் உரு வாகி  அடைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. உடலில் முக்கிய மான உறுப்பான கணையம் பாதிக்கப்படும் போது சர்க்கரை நோய், அஜீரணக் கோளாறு, உடல் வளர்ச்சி பாதிப்பு ஆகி யவை ஏற்படும்.  

இதனை கருத்தில் கொண்டு அரசு தலைமை மருத்துவ அலுவ லர் டாக்டர் கண்ணன் எஸ் .ஜி.கே  மருத்துவமனை சிறப்பு குழந்தை கள் அறுவை சிகிச்சை நிபுணர் விஜயகிரி ஆகியோர் தலைமை யில் குழந்தைகள் மருத்துவர் கள், அறுவை சிகிச்சை மருத்துவர் கள், மயக்க மருந்து நிபுணர்கள்,  குடல் சம்பந்தப்பட்ட அறுவை  சிகிச்சை நிபுணர் மற்றும் செவி லியர்கள் அடங்கிய மருத்துவ குழு அமைக்கப்பட்டது. அத னைத் தொடர்ந்து மேட்டுப்பா ளையம் அரசு மருத்துவமனை யில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்  சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்ட நிலையில், தற் போது சிறுமி உடல் நலத்துடன் உள்ளார்.  இம்மாதிரி சிக்கலான அறுவை சிகிச்சைகள் மருத் துவக் கல்லூரிகள் மற்றும் நகர் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செய்யக்கூடிய வசதிகள் உள் ளது. மேலும், இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள பல   லட்சம் ரூபாய் வரை செலவாகும்.  இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் முதல் முறையாக மேட்டுப்பாளை யம் தாலுகா அரசு மருத்துவம னையில் இந்த அறுவை சிகிச்சை  வெற்றிகரமாக மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதையடுத்து மேட் டுப்பாளையம் அரசு மருத்துவ மனை மருத்துவர்கள் குழுவிற்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு களை தெரிவித்து வருகின்றனர்.  

;