districts

img

அடிப்படை பிரச்சனைகளைத் தீர்க்க கோரி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மனு

அவிநாசி, ஜூன் 3-  வடுகபாளையம் பகுதியில் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க கோரி சிபிஎம் ஊராட்சி மன்ற உறுப்பினர் தலைமையில் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் திங்களன்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித் துள்ளனர்.  அவினாசி ஒன்றியம் வடுகபாளையம் ஊராட்சிக்குட்பட்ட, பட்டியலின காலனி  பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட் டுள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றில், மின் மோட்டார் பழுதாகியதை அடுத்து, இரண்டு  வாரங்களுக்கு முன்பு தண்ணீர் குழாய், மின் மோட்டார் உள்ளிட்டவை அப்புறப்படுத்தப் பட்டது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். அதேபோல முத்தரையர் காலனி பகுதியில் சாக்கடை கால்வாய் தூர் வாராமல் உள்ளதால், முட்பு தர்கள் முடி கழிவு நீர் வெளியேற முடியாமல்  தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு  நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள் ளது.  பிச்சாண்டம்பாளையம் பட்டியரின காலனி அருகே உள்ள உறிஞ்சு குழி கழிவு நீர்  தொட்டியில்  கடந்த ஒரு வருடங்கள் கழிவுநீர்  தேங்கியுள்ளது. இதுபோன்ற அடிப்படை பிரச்சனைகளை அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப் பினர் ராமசாமி தலைமையில் திங்களன்று வட் டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளிக்கப் பட்டுள்ளது.

;