நாமக்கல், நவ.19- ராசிபுரம் அருகே நடைபெற்ற பனை விதைகள் விதைக் கும் விழாவில், ஏராளமான அரசுப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பிள்ளா நல்லூர் பேரூராட்சி, குருசாமிபாளையம் ஏரிக்கரை அருகே 300 பனை விதைகள் விதைக்கும் விழா நடைபெற்றது. செங் குந்தர் மகாஜன அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி பசுமை படை மாணவர்கள் உதவியுடன் இந்த நிகழ்வு நடை பெற்றது. மேலும், 100 நாள் பணியாளர்கள் மற்றும் மாண வர்கள் அனைவருக்கும் மாவட்ட பசுமை படை சார்பாக ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எரியும் பிளாஸ்டிக் பை-க்கு மாற்று பொருளான மஞ்சப்பை வழங்கி மீண்டும் மஞ்சப்பை விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது.