districts

img

நிலத்தை அபகரிக்க முயற்சி: மூதாட்டி புகார்

சேலம், மே 13- 2.15 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்ய யும் சகோதரர் மீது நட வடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட மூதாட்டி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள பொம் மையப்பட்டி பகுதியை சேர்ந்த நாகரத்தினம் (58) என்ற  மூதாட்டி, திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, அதிகாரியை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித் தார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனது தாய் அலமேலுவை, அண்ணன் முத்தையா என்ப வர் கவனித்து வருகிறார். தாய்க்கு 95 வயது ஆகிறது. அவ ருக்கு சுய நினைவு இல்லை. தாய் அலமேலு பெயரில் 2.15 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை தாய்க்குத் தெரியா மல், முத்தையா அபகரிக்க முயற்சி செய்கிறார். அந்த நிலத் தில் என்னுடைய பங்கையும் சேர்த்து அபகரிக்க முயற்சி  செய்து வருகிறார். இதுகுறித்து கேட்டபோது என்னையும், எனது இளைய மகன் செந்தில் ஆகியோரை அடித்து கொலை  மிரட்டல் விடுகிறார். இதுகுறித்து ஓமலூர் காவல் நிலையத் தில் புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி  கொலை மிரட்டல் விடுக்கும் எனது சகோதரர் முத்தையா மீது  நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்டுத்தர வேண்டும், என  கண்ணீர் மல்க தெரிவித்தார்.

;