districts

img

வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல், ஜூன் 2- நாமக்கல் மக்களவைத் தொகுதியில் பதி வான வாக்குகளை எண்ணும் மையத்தில், மத்திய தேர்தல் ஆணைய பார்வையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட னர். நாமக்கல் மக்களவைத் தொகு திக்குட்பட்ட, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங் கோடு, சங்ககிரி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய இயந்திரங்கள், திருச் செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரி யில் தனித்தனி அறைகளில் பாது காப்பாக வைக்கப்பட்டுள்ளன. வரும் செவ்வாயன்று (நாளை) வாக்கு எண்ணிக் கை நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில், மத்திய தேர்தல் ஆணை யர் பார்வையாளர் ஓனில் கிளமெண்ட் ஓரியா நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, வேட்பாளர்கள், முகவர்கள் வாக்கு எண்ணும் பணியினை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள், அவர் கள் வந்து செல்வதற்கான பாதைகள், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட வுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்க ளுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, ஊடக வியலாளர்கள் வாக்கு எண்ணிக்கை மை யத்தில் செய்தி சேகரிக்க ஏதுவாக ஊடக மையம் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சுமன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பொறுப்பு அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

;