districts

img

காலமுறை ஊதியம் வழங்கிடுக

சேலம், ஏப்.12- காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்து ணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். காலிப் பணியி டங்களை போர்க்கால அடிப்படை யில் நிரப்ப வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங் கத்தினர் செவ்வாயன்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடு பட்டனர். சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன்பு சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் அமராவதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் சுரேஷ், மாவட்ட தலைவர் என்.திருவேரங்கன், பொது சுகாதா ரத்துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் வி.செல்வம், தமிழ் நாடு மோட்டார் வண்டிகள் பரா மரிப்பு நிறுவன தொழிலாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் சி.முருகப்பெருமாள், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.ராஜவேலு உள்ளிட்ட நூற்றுக் கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர் கள் பங்கேற்றனர்.  இதே கோரிக்கைகளை வலியு றுத்தி சங்ககிரி, ஏற்காடு, வாழப் பாடி, ஆத்தூர் உள்ளிட்ட 20 ஒன்றி யங்களிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

தருமபுரி

தருமபுரியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் தேவி தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் கே.தேவகி, பொருளாளர் வளர்மதி,  துணைத்  தலைவர் அனுசுயா, ஒன்றிய செய லாளர் ரீனா, பொருளாளர் மாதம் மாள், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நல்லம்பள்ளியில் ஒன்றிய தலை வர் மதலைமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட தலைவர் சி.காவேரி உட் பட திரளானோர் கலந்து கொண்ட னர். காரிமங்கலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலை வர் முனிராஜ் தலைமை வகித்தார். இதில், மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் பி.எஸ்.இளவே னில், ஒன்றிய செயலாளர் சஞ்சீவன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சதீஷ் உட் பட பலர் கலந்து கொண்டனர்.