districts

img

காங்கயம் ஆலம்பாடி ஊராட்சியில் ஊட்டச்சத்து திருவிழா

திருப்பூர், செப். 7 - காங்கயம் வட்டம் ஆலம்பாடி ஊராட்சி யில் புதன்கிழமை தேசிய ஊட்டச்சத்து மாதத்  திருவிழா நடத்தப்பட்டது. இதில் முதல் நிகழ்வாக அங்கன்வாடி மேற்பார்வையாளர் பி.ஜோதிலட்சுமி, கல் லேரி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் சாமிநாதன் ஆகியோர் மரக்கன்றுகள் நட்ட னர். இந்நிகழ்வுக்கு கல்லேரி அங்கன்வாடி மையப் பணியாளர் கே.சித்ரா தலைமை வகித் தார். இதைத் தொடர்ந்து அங்கன்வாடி பணி யாளர்கள் டி.மாரியம்மாள், ஈ.கிளாடீஸ் பெல்ஸியா, எஸ். சாந்தி ஆகியோர் ஊட்டச்சத்து பற்றி மக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். அத்துடன் அங்கன்வாடி மேற்பார்வையாளர் பி.ஜோதி லட்சுமி மையத்தில் வழங்கும்  உணவுகள் பற்றியும், மாதந் தோறும் எடை, உயரம் எடுத் தல் பற்றியும், கர்ப்பிணிகள் கருவுற்றது தெரிந்தவுடன் அங் கன்வாடி மையத்தில் பதிவு செய்ய வேண்டும்  எனக் கூறினார். இந்நிகழ்வில் ஊட்டச் சத்துள்ள உணவுகள் என்ற முறையில் கீரை கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் முன்பரு வக் கல்வி உபகரணங்கள் காட்சிக்கு வைக் கப்பட்டன. கூட்ட முடிவில் சத்துமாவு லட்டு  அனைவருக்கும் வழங்கப்பட்டது.  இவ்விழாவில் கர்ப்பிணிகள், பாலூட்டும்  தாய்மார்கள், குழந்தைகள், குழந்தைகளின் பெற்றோர், வளர் இளம் பெண்கள் மற்றும்  ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

;