districts

img

வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிடுக சத்துணவு ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தல்

தருமபுரி ஜன.5- சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக் கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க தரும புரி மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத் தின் தருமபுரி மாவட்ட 15ஆவது மாநாடு  தருமபுரி ஆர்.டி.நகரில் உள்ள ஊரக வளர்ச் சித்துறை அலுவலகர்கள் சங்க கட்டடத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாவட்ட துணைத்தலைவர் பி.மகேஸ்வரி தலைமை  வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.சேகர் மாநாட்டை துவக்கிவைத்து பேசினார். மாநில துணைத் தலைவர் கே. அண்ணாதுரை சிறப்புறை யாற்றினார். மாவட்ட செயலாளர் சி. காவேரி, மாவட்ட பொருளாளர் கே.தேவகி ஆகியோர் அறிக்கையை சமர்ப்பித்து பேசி னர். இம்மாநாட்டில் சிறப்பு காலமுறை ஊதி யத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர் களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்க ளுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண் டும். தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.   இதைத்தொடர்ந்து மாநாட்டில் புதிய நிர் வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், மாவட்ட தலைவராக சி.காவேரி, மாவட்ட  செயலாளராக கே.தேவகி, மாவட்ட பொரு ளாளராக பி.வளர்மதி, மாவட்ட துணைத்  தலைவர்களாக ஜி.வளர்மதி, எஸ்.அனு சுயா, ராமன், மாவட்ட இணைசெயலாளர் களாக சி.கலைவாணி, ஜெயலட்சுமி, மாநில  செயற்குழு உறுப்பினராக பி.மகேஷ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில செயலாளர் ஆர்.எம்.மஞ்சுளா நிறைவுறை யாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் பி. வளர்மதி நன்றி கூறினார்.