கோவை, நவ.27- தேசிய உடல் உறுப்பு தான நாள் கோவை ஸ்ரீராம கிருஷ்ணா மருத்துவமனை சார்பில் ஞாயிறன்று அனு சரிக்கப்பட்டது. உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வும், பலரை வாழ வைக்க உடல் உறுப்பு தானம் செய்தவர்க ளின் குடும்பத்தினரை கௌரவப்படுத்தும் வகையில் கோவை சித்தாபுதூரில் அமைந்துள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவ மனை சார்பில் ஞாயிறன்று தேசிய உடல் உறுப்பு தான நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் தானமாக கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பெற்று ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் தங் கள் நன்றிகளை தெரிவித்தனர். மேலும், கொடையாளர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவமனையின் நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வில் எஸ்.என்.ஆர் அறக் கட்டளையின் முதன்மை இயக்குநர் ராம் குமார், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுநணர்கள் ஆனந்த், பரதன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.