திருப்பூர், டிச.8- திருப்பூர் மாவட்ட 29 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு செவ்வாயன்று ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. காலையில் நடை பெற்ற துவக்கவிழா நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் சேர்மன் எம்.கோவிந் தசாமி தலைமை தாங்கினார். கல் லூரி பேராசிரியர் வினு வரவேற் புரை நிகழ்த்தினார். மாநாட்டினை திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.ரமேஷ் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சி.ரமேஷ்குமார், தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் உமாசங்கர் வாழ்த் துரை வழங்கினர். தேசிய குழந்தை கள் அறிவியல் மாநாட்டின் நோக்கம் குறித்து , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.ஈசுவரன் உரையாற்றினர். இதன் பின் இரண்டு மாத கால மாக மாணவர்கள் தாங்கள் செய் திருந்த ஆய்வறிக்கைகளை மூன்று அறைகளில் 10 நடுவர் கள் முன்னிலையில் சமர்ப்பித்து பேசினார்கள். இந்த ஆய்வுகளுக்கு நடுவர் களாக ஜெய்ஸ்ரீராம் கல்லூரி, சிக்கண்ணா அரசுக் கல்லூரி, செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூ ரியிலிருந்து கலந்து கொண்டு பேராசிரியர்கள் ஆய்வு செய்த னர்.
மாலையில் நிறைவு விழா விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் முனைவர் கோ.மு.நசீரா தலை மையில் நடைபெற்றது. ஜெய் ஸ்ரீராம் கல்லூரியின் நிர்வாக அலுவலர் முனைவர் அன்பு வாழ்த் துரை வழங்கினார். திருப்பூர் மாவட்டம் முழுவ திலிருந்தும் 25 பள்ளிகளில் இருந்து 60 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் 6 ஆய்வுக்கட்டுரைகள் மாநில மாநாட்டிற்குத் தேர்வாகியுள் ளன. ஆங்கிலம் முதுநிலை: பெம் ஸ்கூல் ஆப் எக்ஸ்லென்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவிகளின், “பழங்காலம் முதல் தற்காலம் வரை விதைகள் சேமிப்பு முறை”. செஞ்சுரி பெளண்டேசன் பள்ளி மாணவிகளின், “ஆன் லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு, கல்வி மற்றும் உடல் நலத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள்”. நைருதி வித்யாபவன் மாணவர் களின், ஆரோக்கியமான வாழ்விற்கு பனை மரத்தின் பலன். ஆங்கிலம் ஜுனியர் (இளநிலை): மெளண்ட் லிட்ரா ஜீ ஸ்கூல் மாண வர்களின், “நீடித்த வாழ்விற்கு அறிவியலின் கண்டுபிடிப்புகள்” கிட்ஸ்கிளப் சி.பி.எஸ்.இ.பள்ளி மாணவர்களின், வீட்டுக்கழிவு நீரி னால் ஏற்படும் சுகாதாரக்கேட்டில் இருந்து நீர் நிலைகளை பாது காப்பது”. தமிழ் முதுநிலை (சீனி யர்): பழனியப்பா மெட்ரிக் மே.நி. பள்ளி மாணவர்களின், “அவினாசி தாமரைக்குளம் பாதுகாப்பு”. மேற்கண்ட 6 ஆய்வுக் கட்டு ரைகள் டிசம்பர் மாத கடைசி வாரத் தில் மேட்டுப்பாளையம் வனக் கல்லூரியில் ஆன் லைனில் நடை பெறும் மாநாட்டில் கலந்து கொள் வார்கள். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.ஈசுவரன் இந்த விவரத்தை தெரிவித்துள்ள்ளார்.