districts

img

புதுப்பொலிவு பெறும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம்

கோவை, செப்.7- ‘அம்ரித் பாரத் ஸ்டேசன்’ திட்டத்தின் ரூ. 14.8 கோடியில் மதிப்பீட்டில் மேட்டுப் பாளையம் ரயில் நிலையம் புதுப்பொலிவு பெற உள்ளது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் கடந்த 1873 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அகல ரயில் பாதை மற்றும் மீட்டர் கேஜ்  ரயில் பாதையைக் கொண்ட ரயில் நிலை யங்களில் மேட்டுப்பாளையமும் ஒன்றாகும். மேட்டுப்பாளையம் - சென்னை இடையே இயக்கப்படும் மிகவும் பிரபலமான ‘தி நீலகிரி எக்ஸ்பிரஸ்’ அல்லது ‘தி ப்ளூ மவுண்டன் எக்ஸ்பிரஸ்’ உட்பட பல்வேறு ரயில்கள், இந்த பாதை வழியாகவே கோவையை அடைகிறது. தற்போது, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இதனிடையே மேட்டுப்பாளையம் ரயில்  நிலையத்தை ரூ.14.8 கோடி மதிப்பீட் டில் புனரமைப்பு செய்யும் பணிகள் துவங்கி யுள்ளன. பயணிகள் நெரிசலைக் குறைக்கும்  வகையில் வாகனப் போக்குவரத்திற்கான அகலமான பாதைகள் உருவாக்கப்பட உள்ளன. தனி நடைபாதைகள், வாகனங் களுக்கான தனி நுழைவு மற்றும் தனி வெளி யேறும் வசதிகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பிரத்யேக வாகன நிறுத்தமிடம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், ரயில் நிலை யத்தை சுற்றியுள்ள நிலப்பரப்பை அழகுப் படுத்தப்பட உள்ளது. பிரதான நுழைவாயில் மேம்படுத்தப் பட்டு கான்கோர்ஸ், முன்பதிவு அலுவலகங் கள், காத்திருப்புக் கூடம் மற்றும் கழிப்பறை களின் உட்புறங்களும் மேம்படுத்தப்பட உள்ளது. எல்இடி விளக்குகள், மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள், கண்காணிப்பு கேம ராக்கள் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.