குன்னூர், டிச.2- குன்னூர் நகராட்சிக்குட் பட்ட கடைகளின் வாடகை உயர்வை அரசின் கவ னத்தை எடுத்துச் செல்லும் வகையில் வியாபாரிகள் தங்கள் கடைகளின் முன்பு வெள்ளைக் கொடி கட்டி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், குன் னூர் நகராட்சிக்கு சொந்த மான மார்க்கெட் கடைகளுக்கு உயர்த்திய வாடகையை செலுத்தாத 900 கடை வியாபா ரிகளுக்கு, அரசு தரப்பில் நோட்டீஸ் வழங் கப்பட்டது. இந்நிலையில், வாடகை உயர்வு குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகை யில் வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் வெள்ளை கொடி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அனைத்து கடைகளிலும் வியா பாரிகள் வெள்ளை கொடி கட்டி, பல மடங்கு உயர்ந்துள்ள வாடகையை குறைக்க வேண் டியும், வாடகை உயர்வு குறித்து குன்னூர் நகராட்சி மற்றும் தமிழக அரசின் கவனத் திற்கு கொண்டு செல்லும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.