districts

காவிரி உபரிநீரை ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றிடுக

தருமபுரி, டிச.16- காவிரி உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண் டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தருமபுரி மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள் ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரு மபுரி மாவட்ட 23 ஆவது  மாநாடு அரூர்  என்.ஆர்.வி திருமண மண்டபத்தில் தோழர் எம்.ஆறுமுகம் நினைவரங்கத்தில் வியாழ னன்று துவங்கியது. செங்கொடியினை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.இளம் பரிதி ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து, வி.மாதன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா ஆகியோர் தலைமை வகித்தனர். வரவேற்பு குழு தலை வர் பி.டில்லிபாபு வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். மாநில செயற்குழு உறுப்பினர் என்.குண சேகரன் மாநாட்டை துவக்கி வைத்து பேசி னார். மாவட்ட செயலாளர் ஏ.குமார் முன் வைத்த அறிக்கையின் மீது பிரிதிநிகள் விவா தித்தனர்.

தீர்மானம்

தருமபுரி மாவட்டம் மாநில சராசரி வளர்ச் சியை எட்டும் வரை ஒன்றிய, மாநில அரசுகள் பட்ஜெட்டுகளில் ரூ.500 கோடி ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். காவிரி உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட் டத்தை நிறைவேற்ற வேண்டும். தருமபுரி யில் சிப்காட், உணவுப்பொருட்கள் பதப் படுத்துதல் மற்றும் ஜவ்வரிசி, பழச்சாறு ஆலை போன்ற வேளாண் சார்பு தொழிற் சாலைகளை தொடங்க வேண்டும். தரும புரி - மொரப்பூர் ரயில் இணைப்புக்கான இருப்புப்பாதை அமைக்க வேண்டும். ஒகே னக்கல் நீர்மின் திட்டத்தை அமலாக்க வேண் டும். செனாக்கல், கல்லாறு அனைகட்டு திட் டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜோதிப்பயணம்

முன்னதாக, இம்மாநாட்டின் முதல் நிகழ் வாய் அரூர் பேருந்து நிலையத்தில் நடை பெற்ற கொடியேற்று நிகழ்ச்சிக்கு ஒன்றிய  செயலாளர் பி.குமார் தலைமை வகித்தார். செங்கொடியினை மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து அரூர் பேருந்து நிலையத்தில் இருந்து செந்தொண்டர் அணிவகுப்பு துவங்கி மாநாட்டு மண்டபத்தை வந்தத டைந்தது. தோழர்கள் எம்.அண்ணாமலை, தேவ.பேரின்பன், கே.எம்.ஹரிபட், எம்.ஆறு முகம், எம்.ராஜேந்திரன், எஸ்.பி.சின்னராசு, எம்.கே.மாதப்பன் ஆகியோர் நினைவு ஜோதிப்பயணம் பெற்றுக் கொள்ளப்பட் டது.
 

;