districts

img

மக்களை அலைக்கழிக்கும் நகராட்சி

அவிநாசி, ஜன.3- மக்களை அலைக்கழிக்கும் திருமுருகன்பூண்டி நக ராட்சியை  கண்டித்து செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. புதிய வரி செலுத்துவது, பெயர்  மாற்றம், குப்பைகள், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு  சேவைகளை நகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும்.  ஆனால், நகராட்சி நிர்வாகம் முறையான பதில் அளிப்ப தில்லை. மேலும், மக்களை தினந்தோறும் அலைக்கழித்து வருகின்றனர்.   இதையறிந்த மார்க்சிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் பி.சுப்பிரமணியம், பி.தேவ ராஜன், எஸ்.பார்வதி சிவகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவிநாசி ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.பால சுப்பிரமணியன் ஆகியோர் நகராட்சி  அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்த திருமுருகன் பூண்டி காவல்துறையினர், நகர மன்ற ஆணையர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில், இரு நாள்களில் சேவை அனைத்தும் தொய்வின்றி நடைபெறும் என கூறினர்.இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.