சேலம், ஜூலை 10- தரமில்லாமல் பாலம் அமைத்த ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம், ஆவடத்தூர் கிராம ஊராட்சி 1 ஆவது வார்டுக்குட்பட்ட ஒத்த முனியன் தெரு வில் 100க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள தறிக்கூடங்களுக்கு செல்லும் தொழிலாளர் கள், சவுரியூர் நடுநிலைப்பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கழிவுநீர் ஓடையை தாண்டி செல்ல வேண்டியுள்ளது. அந்த ஓடையா னது புதர் மண்டி விஷப்பாம்புகள் வாழும் வனங்களாகவும், கழிவு நீர் தேங்குவதால் கொசு உற்பத்தி நிலையமாக மாறி டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களுக்கும், விஷக் காய்ச்சலுக்கும் ஆளாகி மக்கள் சொல் லொண்ணா துயரத்தை சந்தித்து வருகின்ற னர். இதனிடையே அப்பகுதி மக்களின் நீண்ட காலமாக கோரிக்கையாக, 2018 ஆம் ஆண் டில் இந்த ஓடையின் வழியாக பாலம் கட்டு வதற்காக டெண்டர் விடப்பட்டு, ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணி துவங்கப்பட் டது. ஆனால், தற்போது தான் பணி துவங்கப் பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் கட்டுமானப் பணியை பார்த்தபோது, தரமில்லாமல் பாலம் கட்டுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல றிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர் கள் பாலத்தை ஆய்வு செய்தனர். மேலும், ஆவடத்தூர் கிராம ஊராட்சி தலைவரிடம் கட்சி தலைவர்கள் கேட்கையில், வேலையை நிறுத்த சொல்லிவிட்டதாகவும், கூடுதல் நிதி ஒதுக்கி, தரமான பாலம் அமைத்து தருவதாக ஊராட்சி தலைவர் தெரிவித்தார். தற்போது மழை காலம் என்பதால் ஓடையில் கழிவு நீரோடு, மழைநீரும் சேர்ந்து வருகிறது. இத னால், பாலமானது எப்போது வேண்டுமானா லும் சரிந்து விடும் நிலையில் உள்ளதால், அவ் வழியாக செல்ல பொதுமக்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் அச்சப்படுகின்றனர். எனவே, போர்க்கால அடிப்படையில் தர மான பாலம் அமைக்க ஒன்றிய நிர்வாகமும், கிராம ஊராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள முட்புதர்கள், தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும். கான்கிரீட் கால்வாய் அமைக்க வேண்டும் என வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஒத்த முனியன் தெரு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மாதர் சங்க ஒன்றிய செயலாளர் ஜி. கவிதா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் ஒன்றிய செயலா ளர் கே.ராஜாத்தி, மாதர் சங்க தலைவர்கள் சகுந்தலா, சண்முகபிரியா உட்பட அப்பகுதி யைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.