districts

img

தியாகி ஈஸ்வரன் நினைவு நாள்

உடுமலை, டிச.1- வெள்ளியம்பாளையம் தியாகி ஈஸ்வரன்  நினைவு நாளில் விவசாய சங்கம் மற்றும் விவ சாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. உடுமலை தாலூக்கா குடிமங்கலம் ஒன் றியம் வெள்ளியம்பாளையம் கிராமத்தில்  விவசாய தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு  கேட்டு செங்கொடி சங்கத்தின் சார்பில் ஈஸ்வ ரன் தலைமையில் போராடியதால் கூலி  உயர்வு பெறப்பட்டது. இந்த போராட்ட வெற் றியை ஏற்றுக்கொள்ள முடியாத உள்ளூர்  நிலவுடைமையாளர்களின் ஆட்கள் 1981  ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம்  தேதி கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் ஈஸ்வரன் கொல்லப்பட்டார். வெள்ளியம்பாளையம் கிராமத்தில் உள்ள தியாகி ஈஸ் வரன் நினைவிடத்தில்  தமிழ்நாடு விவசாய சங்கத் தின் குடிமங்கலம் ஒன்றிய  தலைவர் சுந்தர்ராஜன் தலை மையில் வியாழனன்று அஞ் சலி செலுத்தபட்டது. இந்நிகழ்ச்சியில் விவசாய சங்கத்தின் குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர்,பொருளாலர் மகேந்திரன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன் றிய செயலாளர் தம்புராஜ், ஒன்றிய தலைவர்  வல்பூரான் மற்றும் சனுபட்டி கனகராஜ்,  முருங்கபட்டி பாலுசாமி, பொன்னேரி நட ராஜ், வெள்ளியம்பாளையம் அருள்ஜோதி,  கோட்டமங்கலம் குழந்தைவேலு மற்றும்  ஆறுமுகம்,  சுப்பிரமணி உள்ளிட்ட திரளா னோர் ஈஸ்வரன் நினைவு இடத்தில் அஞ்சலி  செலுத்தினார்கள்.