உடுமலை, செப்.4- உடுமலையில் 9 ஆவது புத்தக திருவிழாவை முன்னிட்டு மாணவர்க ளுக்கு கலை-இலக்கிய திறனாய்வு போட்டிகள் ஞாயிறன்று நடைபெற் றது. உடுமலை புத்தகாலயம் மற்றும் பின்னல் புக் ட்ரஸ்ட் இணைந்து நடத் தும், உடுமலை 9ஆவது புத்தக திரு விழா தளி ரோட்டில் உள்ள தேஜஸ் மஹாலில் வருகின்ற செப்டம்பர் 16 முதல் 25 தேதி வரை நடைபெற வுள்ளது. அதனையொட்டி பள்ளி மற் றும் கல்லூரி மாணவர்களுக்கு கலை- இலக்கிய திறனாய்வுப் போட்டிகள் ஞாயிறன்று உடுமலை பழைய நக ராட்சி கட்டிடத்தில் (தாகூர் கட்டி டம்) நடைபெற்றது. இதில் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் உடுமலை சுற்றுவட் டார பகுதியிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கலை- இலக் கிய திறனாய்வு போட்டிகளின் ஒருங் கிணைப்புக் குழு தலைவர் சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். உடு மலை தேஜஸ் ரோட்டரி சங்கத் தலை வர் சத்யம் பாபு வாழ்த்துரையாற்றி னார். 2047 இல் இந்தியா, சாலை விதி கள், அறிவியல் விழிப்புணர்வு, உணவு பழக்க வழக்கம், வரலாற்று நிகழ்வுகள், வன பாதுகாப்பு, புத்தக வாசிப்பு ஆகிய தலைப்புகளில் கலை-இலக்கியத் திறனாய்வு போட் டிகள் நடைபெற்றது. இப்போட்டி யில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர் வத்துடன் கலந்து கொண்டனர். கலை-இலக்கிய திறனாய்வுப் போட்டி ஆசிரியர்கள் கண்ணபிரான், சுப்பிரமணியன், விஜயலட்சுமி, சதீஷ்குமார், சரவணன், கண்டி முத்து, லால், அமிர்தநேயன், சுதா சுப்பிரமணியம் ஆகியோர் ஒருங் கிணைத்தனர். இப்போட்டிகளில் வெற்றி பெறுப வர்களுக்கு புத்தகத் திருவிழா நிறைவு நாளில் பரிசு மற்றும் சான் றிதழ்கள் வழங்கப்படும் என புத்தகத் திருவிழா வரவேற்புக் குழு செயலா ளர் சக்திவேல் மற்றும் தோழன் ராஜா தெரிவித்தனர்.