சேலம், மார்ச் 3- சேலம் சட்டக்கல்லூரியில் நடை பெற்ற கல்லூரி மாணவ, மாணவியர் களுக்கான பேச்சரங்கில், பலர் கலந்து கொண்டனர். சேலம் மத்திய சட்டக்கல்லூரியில் மாநில அளவிலான கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான ‘சமூக நீதி: தேவையும், அதன் பரிமாணங்களும்’ என்ற தலைப்பில் பேச்சரங்கம் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கலை, சட்டம், பொறியியல் மற்றும் இதர கல் லூரிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண் டனர். அப்போது, கல்லூரியின் தலைவர் சரவணன் பேசுகையில், சங்க காலத்தில் சமூக நீதிக்கு மனுநீதி சோழன், ஔவை யார், கணியன் பூங்குன்றனார் போன்ற வர்களின் சமூக நீதி செயல்பாடுகளை எடுத்துரைத்தார். மேலும், சமுதாயத்தில் அனைவரும் சமம் எனவும், ஏற்றத் தாழ்வுகள் எதுவும் இருக்கக்கூடாது என் பதையும், பாரதியார், திருவள்ளுவர், கண்ணதாசன், பெரியார், அண்ணா போன்றவர்களின் கருத்துகளோடு ஒப் பிட்டுப் பேசினார். இதைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் பேசு கையில், பெண்கள் சங்க காலத்திலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் எப் படி இருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டுடன் கூறினார். சங்க காலத்தில் பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்ததையும், அது தற்போது பெண் களின் படிப்பறிவினால் நீக்கப்பட்டு, இந்த சமூகத்தில் சமூக நீதி மாற்றம் பெற்றி ருப்பதையும் எடுத்துரைத்தார். இந்த சமூக நீதிப்பயணம் இத்தோடு நின்று விடாமல், தொடர்ந்து நமது தலைமுறைக் கும் எடுத்துச்செல்ல வேண்டும். சமூக நீதி இல்லாத ஜனநாயகம் ஒரு ஜனநா யக நாடாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேச்சரங்கில் பங்குபெற்ற அனைவருக்கும் சான்றி தழ்களையும், பரிசு பெற்றவர்களுக்கு கோப்பைகளையும் எஸ்.பீட்டர் அல் போன்ஸ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதன்மை நிர்வாக அலுவலர் எ.மாணிக்கம், கூடு தல் நிர்வாக அலுவலர் சுகந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.